Friday, January 11, 2013

பிரதம நீதியரசரை பதவி நீக்கும் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு? நீதியரசரின் வீட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அமைச்சர்கள்!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பிரதம நீதியரசரை வீட்டுக்கு அனுப்பும் கடித்தை ஜனாதிபதி விரைவாக அனுப்பி வைக்கவுள்ளதாக தெரியவருகின்றது. குற்றப் பிரேரணை தொடர்பான கடிதத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கையளிக்கவுள்ளார்.

தொடர்ந்து பிரதம நீதியரசரை பதிவியிலிருந்து நீக்குவதான தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட கடிதத்தை பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைப்பார் என்பதே அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

ஆனால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது குற்றப்பிரேரணை அல்ல மாறாக மற்றுமொறு குழுவை நியமிப்பதற்கான அங்கீகாரமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா,மஹிந்தாநந்த அளுத்கமகே, டிலான் பெரேரா,லசந்த அழகிய வண்ண ஆகியோரே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

கோல்டன் கீ வைப்பீட்டாளர்களே பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment