இலங்கையில் அசிட் மழையும் பெய்யும் - விஞ்ஞானி அனுர சி.பெரேரா
நாட்டில் பல பாகங்களில் அண்மைகாலமாக பெய்து வரும் மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை வீழ்ச்சிகளுக்கு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகையே காரணம் என விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளதுடன் இதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், "அசிட்' மழையும் பெய்ய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகைகள், நுண்ணுயிர்களுடன் கலந்து வாயுமண்டலத்தைச் சென்றடைவதாலேயே இந்த மழை பெய்கின்றது. இதனாலேயே நிறங்களில் மழை பெய்கின்றது. இதற்கும் எரி நட்சத்திர மழைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை மட்டு மல்லாது ஏனையவை தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொள்வதாக விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment