இலங்கையில் வேரோடு அறுக்கப்படும் இனம்
கடந்த வாரம் மகரகமவில் முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தை அகற்றக்கோரி நடந்த ஆர்ப்பாட்டம். இலங்கையில் இன ஜக்கியத்தை சீர்குலைக்க எடுக்கப்படும் செயற்பாட்டின் இன்னெரு வடிவமாகவே இருந்தது.
புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களை பொறிக்குள் வாழ நிர்ப்பந்திருந்ததைப்போல் இந்த நாட்டின் இன்னொரு சிறுபாண்மை இனமான முஸ்லீம் மக்களையும் வலிந்து வன்முறைக்குள் இழுக்க முயற்சிக்கின்றதோ என்று முஸ்லீம் மக்கள் சந்தேகிக்ககின்றனர்.
தற்செயலாக நடைபெறுகின்ற நிகழ்வுகளாக இவற்றை கருத முடியவில்லை. இது திட்டமிட்டு முஸ்லீம் மக்களை வெறுப்பேற்றுவது போல் உள்ளது.
இவ்விடையங்களின் ஆணிவேர் கண்டுபிடிக்கப்பட்டு அறுக்கப்படாமல் இருப்பதே குறித்த சந்தேகங்களை உறுதிசெய்கின்றன. பள்ளிவாசல்களில் தாக்குதல், ஹலால் பிரச்சினை இப்போது வர்த்தக நிலையங்களை குறிவைக்கும் பிரச்சினை. இது நாள் வரை இவ்வாறான பிரச்சினைகள் எழவில்லை.
புலிகள் ஒரு பிரச்சினையாக இருந்தவரை சும்மா இருந்து விட்டு இப்போது எத்தனை தமிழ் கடைகள் இருக்கின்றன? எத்தனை முஸ்லீம் கடைகள் இருக்கின்றன? எந்த ஊரில் எந்த இனத்தவர் பெரும் பான்மையாக வாழ்கிறார்கள்? என்று ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
சிறுபாண்மை இனங்கள் எல்லா வகையிலும் சிறுபாண்மையினராகவே இருக்க வேண்டும் என்று சிந்திக்கின்றவர்களாலேயே இவ்வாறான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன இந்த நிலையானது இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல.
ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஜக்கிய உணர்வையும் சிதைத்துவிடும். ஒற்றுமையின் வேர்களை அறுத்துவிடும். எனவே கண்டனத்திற்குரிய இன வேறுபாட்டையும். சிறுபாண்மையினர் மீதான தாக்குதல்களையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
சிறுபாண்மையினரை அரவணைத்தும். அவர்ளுக்கான உரிமைகளை மதித்தும் வாழாத பெரும்பாண்மையினரின் இருப்பானது மதிக்கத்தக்கதாக இருக்காது. அத்தகைய பெரும்பாண்மையினர் தமது உரிமைகளையும். இறைமையையும் முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்வார்கள் என்பதை உலக வரலாறுகள் நிரூபித்திருக்கின்றன்.
இன்னொருவருக்கு உன்னால் வழங்கப்படாததை நீயும் பெற்றுக் கொள்ளமுடியாது. இந்த உலகஉண்மையை இலங்கையர்கள் அனைவரும் உணர்ந்து வாழ்வது நமக்கும். நாட்டுக்கும் நல்லதாகும்.
0 comments :
Post a Comment