நீதிமன்றத்திற்காக உயிர் நீக்கவும் தயாராக இருக்கின்றாராம் பொன்சேக்கா !
நீதிமன்றத்தின் சுந்திரத்தைப் பாதுகாப்பதற்காக வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தொடர்ந்து போரிடுவதாயின் தான் உயிர்நீத்து அதற்கு உதவவும் தயார் என்று சரத் பொன்சேக்கா தெரிவிக்கிறார்.பிரதம நீதியரசருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றப் பிரேரணையை விசாரணைக்கு எடுத்துள்ள பாராளுமன்றத்தின் விசேட தேர்வுக்குழுவின் தீர்ப்பை வலுவிழக்கச்செய்து, ரீட் ஆணையை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தனது மரியாதையைத் தெரிவிப்பதாகவும் அவர் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்தார்.
இன்று நாட்டில் ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லையென்றும், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துடைய அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பயமுறுத்தல் தொடர்வதாகவும் குறிப்பிட்ட அவர், கெட்ட நடத்தைகளில் ஈடுபடும் அமைச்சர்களின் விருப்புக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸார் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் திசை திருப்பப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment