பட்டதாரிப் பயிலுநர்களை உடனடியாக நிரந்தரமாக்குக! என குரல் எழுப்புகிறது பட்டதாரிகள் சங்கம்
‘2012 பெப்ரவரி மாதம், பின்னர் நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கூறி பட்டதாரிகள் 6 மாத பயிற்சிக் காலத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். என்றாலும் இதுவரை தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகள் அரச சேவையில் உள்வாங்கப்படவில்லை. 2013 வரவு செலவுத் திட்டத்தில் கூட இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் பட்டதாரிகள் பெரும் பிரச்சினைகள் கிளப்புவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.’ இவ்வாறு தொழில்புரியும் பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் சந்தன சூரிய ஆரச்சி குறிப்பிடுகிறார். அச்சங்கத்தினால் நேற்று (12) தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பயிற்சிப் பட்டதாரிகள் அரச சேவைக்காக நியமிக்கப்பட்டபோதும், அரசியல் தேவைகளுக்கே அவர்கள் இன்று பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குள்ள பிரச்சினைகளுள்,
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் மாகாண மட்டத்தில் கதியில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.
தற்போது அரசாங்கம் வழங்குகின்ற ரூபா 10000/- போதியதாக இல்லாமையினால் நிரந்தரமாக்கும் வரையேனும் அதற்குத் தீர்வு வழங்குதல்.
தற்போது வழங்குகின்ற ரூபா 10000/- பெறுகின்ற சிலருக்கு டிசம்பர் மாதம் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்காமலிருப்பது.
திணைக்களங்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள விடத்தும், அந்தப் பட்டதாரிகளுக்குரிய கடமைகளை திணைக்களங்களுக்குள் வழங்காமல், இதுவரை மாவட்டச் செயலகங்களுக்குக் கீழ் செயற்படுத்திச் செல்லும் செயற்பாடுகளில் தெளிவின்மையோடு இருப்பது.
திணைக்களங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள விடத்தும், பட்டதாரிகள் அவ்வவ் திணைக்கள செயலாளர்களுக்கோ, ஆணையாளர் நாயகத்துக்கோ கடமைகள் பற்றி இதுவரை அறிவிக்காமல் இருப்பது.
மாவட்டச் செயலாளரின் தலைமையின் கீழ் பணியாற்றும் பட்டதாரிப் பயிலுநர் ஒருவர் அவரது கையொப்பத்துடன் திணைக்களமொன்றுக்கு குறித்த்தொரு பதவிக்கு விண்ணப்பித்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, அவ்வவ் பிரதேசங்களில் உள்ள ஆளும் கட்சியினரின் அமைச்சருக்கோ, பாராளுமன்ற உறுப்பினருக்கோ, தொகுதி அமைப்பாளருக்கோ மாவட்டச் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனத்தை மனதிற்கொள்ளாமல் அரசியல்வாதிகள் விருப்பிற்கேற்ப வேறொரு பட்டதாரியை நியமிக்கும் அசமந்தப்போக்கு.
மாதமொன்றுள் ஏதேனும் ஒரு விடுமுறையை பட்டதாரிப் பயிலுநரும் பெறுவது சாதாரண விடயம். என்றாலும், அவ்வாறான விடுமுறைக்கும் வழங்கப்படுகின்ற மாதக் கொடுப்பனவிலிருந்து கழித்துக் கொடுக்கும் சில நிறுவனங்கள் ரூபா 10000 இனை 20 இனால் பிரித்துக் கொடுக்கும் அதேவேளை சில நிறுவனங்கள் 30 இனால் பிரித்துக் கொடுப்பது.
பிரசவ விடுமுறைக்காக திணைக்களத்து பெண் பட்டதாரிகளுக்காக 14 நாட்கள் வழங்கப்படுவதுடன், அதற்காக எங்களது சங்கம் எதிர்ப்பைத் தெரிவித்து, அதற்காக குறைந்தது 06 மாத பிரசவ விடுமுறை பட்டதாரிப் பயிலுநருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறிநிற்பதுடன், அது தற்போது 1 ½ மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றாலும் அது 06 மாதங்களாக்கப்படவேண்டும்.
இந்தப் பட்டதாரிகளுக்குத் தேவையான காரியாலய தொடர்புடைய சலுகைகள், பௌதீக வளங்கள் ஓராண்டு நிறைவுற்றபோதும் இதுவரை வழங்கப்படாதிருப்பதுடன், நிரந்தர நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு வேண்டிய அளவு சலுகை வழங்கப்பட்டுள்ளமை.
போன்ற விடயங்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
பட்டதாரிப் பயிலுநர்களுக்குத் தேவையான உதவிகளை மிகவும் அவசரமாக வழங்கி, அவர்களுக்கு வெகு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கவேண்டிய தேசிய தேவையும் மேலெழுந்துள்ள இந்நேரம் பட்டதாரிகள் பற்றி தப்பபிப்பிராயம் கொள்ளக்கூடிய முறையில் இதுவரை அவர்கள் நடந்துகொண்டுள்ளதால் அவர்களின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களிடம் அந்தச் சங்கம் குறிப்பிட்டது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment