சவுதி அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் உக்கிரமடைகின்றது.
மக்கா நகரிலும் புரைதா மத்திய நகரிலும் அல்சஊத் அரசுக்கெதிராக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர் என பிரஸ் ரிவி தெரிவிக்கின்றது. செவ்வாய்கிழமை, இவ்விரு நகரங்களிலும் இடம்பெற்ற இம்மாபெரும் ஆர்ப்பாடங்களில், சவூதி அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
டிசம்பர் 31ம் திகதி, பல்லாயிரக்கணக்கான சவூதி மக்கள், எண்ணெய் வளம் மிக்க மாகாணத்தில், இளம் பேரணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
கதிப் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 27ல் இடம்பெற்ற பேரணியின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அஹ்மத் அல்மராரின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
பெப்ரவரி 2011 தொடக்கம், சவூதி அரேபியாவில் குறிப்பாக கிழக்கு மாகாணாத்தின் கிழக்கு மாகாணத்தின் கதிப் மற்றும் அவாமிய்யா நகரங்களில் தொடர்ந்து இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அரசுப் படைகளின் தாக்குதலில் பல பொதுமக்கள் காயங்களுக்குள்ளாகி உள்ளதுடன் மற்றும் பல தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நவம்பர் 2011ன் பின் வீரியத்துடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டம் புரியும் பொது மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தக்கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை சவூதி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கருத்தின் பிரகாரம், அரசுக்கெதிரான விமர்சனங்களையும் கருத்துகளையும் சவூதி அரசாங்கம் மிகக் கடுமையான முறையில் நசுக்கி வருகின்றது.
0 comments :
Post a Comment