பிரதம நீதியரசருக்காக ஜேவிபி யுடன் கைகோர்க்கின்றது ரிஎன்ஏ!
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அங்கத்தவரான தமது கட்சி உறுப்பினர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை ஆஜராகுவாரென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ள அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நீதிமன்றில் ஆஜராகுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசதரப்பும் எதிர்கட்சியான ஜ.தே.கவும் நீதமன்றில் ஆஜராக மாட்டோம் என்று அறிவித்திருந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கூறினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நான் ஆஜராகுவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
1 comments :
தமிழ் மக்களுக்கு எதிரான கோஷத்தினையே தாரக மந்திரமாக கொண்டிருக்கிற ஜேவிபியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்திலும் இணைய முடியுமா?
Post a Comment