Wednesday, January 9, 2013

வடகிழக்கில் மீண்டும் கடும்மழை மக்கள் இடம் பெயரும் அபாயம்-தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம்

கிளிநொச்சி முல்லைத்தீவு,மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மூன்றாவது நாளாக கடும் பெய்து வருவதால் மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செய்திகள்;செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடும் அடை மழை பெய்து வருகின்றனது.

இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதோடு ஒரு சில இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் தொடர்ச்சியான மழை நீடிப்பதாகவும், காற்றழுத்த தாழ்வு நிலையான காலநிலை நீடிப்பதாகவும் தெரியவருகின்றது. இதனால் மக்கள் இடம்பெயரும் அபாயம் உள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்திலும் கடந்த இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இரவு பகல் மழை பெய்தவண்ணமே உள்ளது மேலும் இன்று காலை முதல் கடும் காற்றும் வீசுகின்றது; மேலும் தாழமுக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் மீண்டும் மக்கள் இடம்பெயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com