புற்றுநோய் வைத்தியர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது நேற்றிரவும் தாக்குதல் முயற்சி
யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியக்கலாநிதி என்.ஜெயக்குமாரின் வீட்டில் மீது நேற்றிரவும் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடென்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளிலில் வந்த இனந்தெரியாத இருவரே இத்தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை முன்னர் ஒரு தடவையும் வைத்தியர் இல்லம் தாக்கப்பட்டது.
0 comments :
Post a Comment