புனர்வாழ்விலிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்று விடுதலை
வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மற்றும் விஞ்ஞான பீட மூன்றாம் ஆண்டு மாணவனான எஸ்.சொலமன் ஆகிய. இருவருமே இவ்வாறு வவுனியா முகாமில் வைத்து விடுவிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வை நிறைவு செய்த நிலையிலேயே; விடுவிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர்களுடன் கைது செய்யப்பட்ட மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயன் ஆகியோர் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.
இவர்களுக்கு தொடர்ந்தும் புனர்வாழ்வு அளிக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment