ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியோகச் செயலர் மேஜர் ஜெயக்கொடி பதவிநீக்கம்?
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பொலிஸ் விசாரணைகளை எதிர்கொண்டிருந்த வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியே செயலாளர் மேஜர் சுமித் ஜெயக்கொடி உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சுமித் ஜெயக்கொடிமீது பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இருந்தபோதிலும் இச்செய்தியை ஆளுநர் தரப்பில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும் நாளைய தினம் இச்செய்தி தொடர்பில் முழுமையான விபரத்தினை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment