பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி மண்டைதீவில் பேரணி
மண்டைதீவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு நீதி கிடைக்க கோரியும் குற்றவாளிகளைத் சட்டம் விரைவாகத் தண்டிக்க வேண்டும் எனக் கோரியும் பொது மக்களால் அமைதிப் பேரணியென்று இன்று நடாத்தப்பட்டது. இப் பேரணிக்கான ஏற்பாட்டினை றோஜாவனம் சிறுவர்கழகம் மேற்கொண்டது.
மண்டைதீவு பேரருலானவர் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி மண்டைதீவில் உள்ள வேலணை உப பிரதேசசபை காரியாலயத்துக்கு சென்று, அங்கு இருந்து மண்டைதீவு வீதிகளை சுற்றி வந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் நிலையமான மண்டைதீவு பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.
பொலிஸ் நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரிஇ மண்டைதீவு பங்குத்தந்தை விஜிண்டஸ் ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இப்பேரணியில் தீவக வலயக்கல்விப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வேலணை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் வேலணை சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment