14 வயது முதல் 24 வயது வரை உள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இணையதளத்திற்கு அடிமையாவதை பெற்றொர்கள் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி பெடரல் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் படி 14 முதல் 24 வயதுள்ளோர் வரை இணையதளத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.
இதில் 2.4% முற்று முழுதான இணையதள அடிமைகள், 13.6% பிரச்சனை பயனாளர்கள் என்று வகைப்படுக்தியுள்ளனர்.
ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக் கழகத்தின் சூதாட்ட அடிமைகள் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் இயக்குனர் கிளாஸ் வுல்ஃபிளிங் என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.
'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையதள அடிமைகளாகி தனிமைப்பட்டுப் போய் விட அனுமதிக்கக் கூடாது. பெற்றொர்கள் குழந்தைகளிடத்தில் இதுபோண்ற அறிகுறிகளைக் கண்டவுடன் அவர்களிடம் பேசி நயமாக வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார் இவர்.
குறிப்பாக ஒண்லைன் கணினி விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவது பெருத்துள்ளது என்று இவர் கூறுகிறார். கணினி விளையாட்டுக்களில் ஒரு பிரச்சனையை தீர்ப்பது என்கிற வகையில் ஆட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் இயல்பிலேயே அதன் பக்கம் சென்று விடுகின்றனர்.
இது தவிர சோசியல் நெட்வொர்க், அரட்டைகளுக்கு அடிமையாவதும் அதிகரித்துள்ளது. அதாவது எதார்த்த வாழ்க்கையில் அல்லது நிஜமான உலக வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்காத தனி அடையாளம் இதில் கிடைப்பதாக இவர்கள் உணர்வதே அடிமைக்கு இட்டுச் செல்கிறது.
இணையதளத்தில் நண்பர்களை அடைகின்றனர். எப்போதும் அவர்கள் இணையத்தில் இருப்பதால் தனிமை இல்லை. ஆனால் உண்மையான சமூகத்திலிருந்து அன்னியப்பட்டு விடுகின்றனர் என்கிறார் இந்த ஜெர்மானிய உளவியல் நிபுணர்.
இதனை வலுக்கட்டாயமாக தடுக்க நினைத்தால் கடுமையான உளவியல் சிக்களுக்கு இவர்கள் ஆளாகின்றனர். தூக்கமின்மை உள்ளிட்ட பிற மன நோய்களும் ஏற்படுகிறது என்கிறார்.
அடிமையாகாமல் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு 3 மணிநேரம் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அடிமைகள் 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக அதில் புழங்குகின்றனர்.
இணையதளத்தை கட்டுப்பாட்டுடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார் இவர்.
No comments:
Post a Comment