அனர்த்த நிவாரணங்களை சுருட்டிய அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கென வழங்கப்பட்ட நிவாரணங்களை மோசடி செய்து சுருட்டிக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராகவும் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற தவறிய ஊழியர்களுக்கு எதிராகவும் தீவிர விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான நிதி அரசினால் ஒதுக்கப்பட்டிருந்தது. இவற்றில் சுருட்டிய ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கைளை எடுத்துள்ளது. அத்துடன் கடமை தவறிய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment