அநுராதபுரம், பகுதியிலுள்ள முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றை அகற்றுமாறு கோரி பௌத்த பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதோடு, முஸ்லீம்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றுமாறும் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்த விகாரையை அகற்றுமாறு கோரியே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பகுதியில் தக்கியாப் பள்ளிவாயலொன்று அமைந்துள்ளதோடு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இப்பள்ளிவாசலுக்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment