(கலைமகன் பைரூஸ்) கட்சியின் தலைமை குறிப்பிடும் கட்டளைகளையும், கருத்துக்களையும் ஏற்று நடக்க முடியாவிட்டால் அவசரமாக பாராளுமன்ற மந்திரிப் பதவியிலிருந்து விலகிச் செல்லவேண்டுமென ஐதேக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மந்திரிமார் ஐவருக்கு இன்று கட்டளையிட்டார்.
இதன்பிறகு கட்சியின் இருப்பிற்கு பாதகம் விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதான அமைப்பாளர் வழக்கறிஞர் அஜித் பீ பெரேரா, தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் ருவன் விஜயவர்த்தன, புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நிரோட் பெரேரா, கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மந்திரிகளான கலாநிதி ஹர்ஷ த சில்வா மற்றும் எரான் விக்கிர்ரத்ன போன்றோருக்கு எச்சரிக்கை செய்தார்.
No comments:
Post a Comment