கிழக்கில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் முடிவின்றி நிறைவேறியது. பொன் செல்வராசா
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று கிராமங்களை முஸ்லிம் பிரதேச செயலக நிர்வாக அலகுகளினுள் கொண்டுவருதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முயற்சி கைவிடப்படவேண்டும் என பிரதேச மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஹர்த்தால் என்பவற்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஏலவே திட்டமிட்டிருந்தபடி இன்று பொது நிர்வாக சேவைகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் முஸ்லிம் பாராளுமன்று உறுப்பினர்கள் மற்றும் மகாண சபை உறுப்பினர்கள் சிலர் விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடல் தொடர்பாக இலங்கைநெற் இற்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறுகையில் : ' இன்றைய கூட்டத்தில் நாம் எமது தரப்பு நியாயங்களையும் அவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களையும் முன்வைத்தோம். குறித்த 3 மூன்று கிராமங்களும் முஸ்லிம் நிர்வாகத்தினுள் இணைக்கப்படுகின்றபோது, நாம் சுமார் 46000 ஏக்கர் நிலத்தினை இழக்கின்றோம் என்ற விடயத்தை கௌரவ அமைச்சருக்கு எடுத்தியம்பினோம். இதனடிப்படையில் கடந்த மாதம் அம்பாறை கச்சேரியில் பொது நிர்வாக சேவைகள் அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட முடிவான முன்று கிராமங்களையும் முஸ்லிம் பிரசேத செயலகங்களுகடன் இணைப்பது என்ற முடிவை அமைச்சர் ஒத்தி வைத்தார். அத்துடன் இருதரப்பு நியாயங்களையும் எழுத்தில் முன்வைக்குமாறும் பணித்ததுடன், கலந்துரையாடல் எவ்வித முடிவுகளையும் எட்டாமல் முடிவடைந்தது' என்றார்
0 comments :
Post a Comment