Monday, January 21, 2013

ரிஸானாவுக்காக இஸ்லாத்தையும், மத்திய கிழக்கு நாடுகளையும் தூற்றுவது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதா? - வினாதொடுக்கிறார் டிலான் பெரேரா

ரிஸானா நபீக்கின் மரணத்தை சாதகமாகக் கொண்டு சில இனவாதக் குழுக்கள் அவரின் குடும்ப அங்கத்தவர்ளையும், இஸ்லாம் மதத்தையும், முஸ்லிம் தலைவர்களையும், சகல மத்திய கிழக்கு நாடுகளையும் இழிவான முறையில் பேசுவதும், செயற்படுவதும் சர்வதேச ரீதியாக இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்னோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர், தனக்கு அறிவில்லை என்பதை உலகிற்கிற்குக் காட்டி, தானும் ஒரு அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர் முழு இலங்கையருக்கும் மட்டுமல்ல, விசேடமாக பௌத்தர்களுக்கும் களங்கமே விளைவிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் சுய அரசியல் இலாபத்திற்காகவே செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான கருத்துக்களை முன்வைப்பர்கள் முஸ்லிம் தலைவர்களையும் இழிந்துரைப்பதோடு, பணத்தின்மீது இருக்கின்ற அவாவினால் ரிஸானா நபீக்கின் விடயத்தில் சகலரும் வாளாவிருந்ததாக காட்ட முனைவதனாலும், ரிஸானா விடயத்தில் இலங்கை அரசும் முஸ்லிம் தலைவர்கள் உட்பட ஏனையோரும் மேற்கொண்ட முயற்சிகளை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதனாலும் அதற்குப் பதிலடி கொடுக்குமுகமாகவே அமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.


(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com