Sunday, January 20, 2013

இலங்கை அவுஸ்ரேலியா அணிகள் மோதிய நான்வது ஒரு நாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டது

இலங்கை அணிக்கும் அவுஸ்த்ரேலிய அணிக்கும் இடையிலான நான்காவது போட்டி மழை காரணமாகவ கைவிடப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றது.


துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக டேவிட் வோணர் 73 பந்துகளில் 60 ஓட்டங்களையும் மிற்சல் ஸ்ரார்க் 37 பந்துகளில் 52 ஓட்டங்களையும் மத்தியூ வேட் 53 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக நுவான் குலசேகர 10 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் லசித் மலிங்க, ரங்கன ஹேரத் மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

223 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

எனினும் மழை தொடர்ந்ததன் காரணமாக போட்டியை மீள ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 4 போட்டிகளின் நிறைவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment