(கலைமகன் பைரூஸ்) இந்திய மேஜர் விகாஷ் குமார் தனது இலங்கைக் காதலி அர்னிலா ரன்மலீ குணரத்னகே வுடன் எதிர்வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இதுபற்றி இந்திய ஊடகங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. அவர்கள் சென்ற 2011 டிசம்பரில் திருமணம் செய்துகொள்ளவிருந்ததாகவும், சட்டப் பிரச்சினையொன்று காரணமாக அது 2012 ஆக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய இராணுவ மேஜர் விகாஷ் பிறநாட்டுப் பெண்ணொருவருடன் திருமணம் செய்வது சம்பந்தமாக அவர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு சென்ற 2012 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பின்படி அவருக்கு இராணுவத்திலிருந்து விலகுவதற்கும், இந்திய இராணுவ அக்கதெமி ஒருவருட பயிற்சிக் காலத்திற்குச் செலவுசெய்த இந்திய ரூபா 16 இலட்சத்தையும் மீள இராணுவத்திற்குக் கையளிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டது.
இலங்கைப் பெண்ணுடன் இந்திய மேஜர் திருமணம் செய்துகொள்வதற்கு விருப்புத் தெரிவித்தபோதும், பெண்ணின் இலங்கைப் பிரசாவுரிமையை விட்டுக்கொடுக்காததன் காரணத்தால் மேஜர் விகாஷ் இராணுவத்திலிருந்து கேட்டுவிலக நேர்ந்ததாமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment