Thursday, January 10, 2013

யாழ். குடாவுக்கு வரும் வாகனங்கள் இனி சோதனை!

ஒவ்வொரு வகை வாகனங்களிலும் அவற்றின் கொள்ளவுக்கு ஏற்ப பொருள்களின் நிறை ஏற்றப்பட வேண்டும் என புதிய கட்டுப்பாடு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ். குடாநாட்டுக்குள் பொருள்களுடன் நுழையும் வாகனங்கள் நாளை(11.01.2013) வெள்ளிக்கிழமை முதல் நிறை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.


வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டமானது பலகோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்  
வீதிகளை நீண்ட காலத்துக்குப் பேணும் வகையில் இந்த நடைமுறை கொண்டு வரப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் ஓமந்தை மற்றும் பரந்தன் ஆகிய இடங்களில் வாகனங்களின் நிறை சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

  1. நான்குசக்கரமுடைய பின்புற எக்செல் உடைய வாகனம் 15,275 கிலோகிராம் நிறை காணப்படவேண்டும்.
  2. எட்டு சக்கரமுடைய பின்புற மூன்று எக்செலுடைய மோட்டார் வாகனத்தில் 20,000 கிலோகிராம் நிறை காணப்படவேண்டும்.
  3. ஓட்டுநர் பகுதியில் நான்கு சக்கரமுடைய பின்புற எக்செல் உடைய மற்றும் டிரேயிலருக்கான நான்கு சக்கர எக்செலுடை இழுத்துச் செல்லும் வாகனத்துக்கு 21,000 கிலோகிராம் நிறை காணப்படவேண்டும்.
  4. எட்டு சக்கரத்துக்குக் குறைந்த சக்கரமுடைய இழுத்துச் செல்லும் வாகனம் அல்லது இணைக்கப்பட்ட வாகனத்துக்கு 16,500 கிலோகிராம் நிறை காணப்படவேண்டும்.
  5. ஓட்டுநர் பகுதியில் எட்டுச்சக்கர இரட்டை எக்செலுடன் கூடிய டிலேயிலருக்காக 4 சக்கர எக்சேலுடன் கூடிய இழுத்துச் செல்லும் வாகனம் அல்லது இணைக்கப்பட்ட வாகனம் 26,500 கிலோகிராம் நிறை காணப்படவேண்டும்.
  6. ஓட்டுநர் பகுதியில் இரண்டு சக்கர முன்பக்க எக்செல் மற்றும் நான்கு சக்கர பின்புற எச்செலுடன் கூடிய மற்றும் டேலருக்காக எட்டுச் சக்கர இரட்டை எக்செலுடன் கூடிய இழுத்துச் செல்லும் வாகனம் அல்லது இணைக்கப்பட்ட நிறையும் ஓட்டுநர் பகுதியில் இரண்டு சக்கர முன்பக்க எக்சல் மற்றும் எட்டு சக்கர பின்புற இரட்டை எக்சலுடன் கூடிய மற்றும் டேலருக்காக எட்டுச்சக்கர இரட்டை எக்செலுடன் கூடிய இழுத்துச் செல்லும் வாகனம் அல்லது இணைக்கப்பட்ட வாகனத்துக்கு 30,500 கிலோகிராம் நிறையும் இருக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத்தின் மொத்த அகலம் 2,500 மில்லிமீற்றர் ஆகவும் , உயரம் 3,800 மில்லிமீற்றர் ஆகவும் இருக்க வேண்டும்.

இரட்டைத் தட்டு மோட்டார் கோச்சு ஒன்றின் உயரம் 4,600 மில்லிமீற்றர், மோட்டார் கோச்சுத் தவிர்ந்த இரண்டு அச்சுக்களுள்ள மோட்டார் வாகனத்தின் மொத்த நீளம் 10,000 மில்லிமீற்றர், இரண்டுக்கு மேற்பட்ட அச்சுகளுள்ள மோட்டார் வாகனத்தின் மொத்த நீளம் 11,000மில்லிமீற்றர், மூடியிணைப்பு வாகனத்தின் மொத்த நீளம் 14,000 மில்லிமீற்றர் கொண்டவைக்கு நிறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com