Thursday, January 3, 2013

யாழ் மாவட்ட மின்சார தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாம்!

சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் ஊடாக நூற்றுக்கு நூறு வீதம் மின்சாரத்தை விநியோகிக்க கூடியதாகவுள்ளதாகவும் 3 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் 6 மாத காலத்தினுள் நாட்டில்  நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் நிலையம் இது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் 24 மெகாவோட் மின்சாரத்தை இணைக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் ஊடாக யாழ் மாவட்டத்திற்கான மின்சாரத்தை  விநியோகத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாகவும் சபை தெரிவிக்கின்றது.

யாழ் குடாநாட்டில் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் மின்பாவனையாளர்கள் உள்ளனர். கடந்த வருடம் யாழ் மாவட்டத்திற்கு தேவையான மின்சாரத்தில் 90 வீதமான மிச்சாரத்தை மட்டுமே மின்சார சபையினால் விநியோகிக்க முடிந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment