யாழிலில் கிணற்றலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண் கொலையின் பின்னரே கிணற்றில் வீச்சு- யாழ்.பொலிஸார்
யாழ்.மத்தியூஸ் வீதியில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட வயோதிப மாது கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்.மத்தியூஸ் வீதியிலிலுள்ள குளத்தடிக் கிணற்றலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்..
இச்சடலத்தை பிரேதப் பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
இதன் பிரேதப்பரிசோதனைகள் முடிவடைந்த பின்னரே இத்தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment