புனர்வாழ்வு புலிக்கு உதவியா!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு அரச,அரசசார்பற்ற நிறுவனங்களால் உதவிகள் வழங்கப்படுகின்ற போதிலும் பலருக்கு இவ்வுதவிகள் எதுவும் கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்படுவதுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சுய தொழிலை மேம்படுத்துவதற்காக வங்கிக் கடன் வசதி, ஐ.ஓ.எம். உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் என்பன வழங்கப்படுகின்றன.
இதன்மூலம் பலர் தமது வாழ் வாதாரத்தை மேம்படுத்தி கஷ்டமின்றி வாழ்ந்து வரும் நிலையில் பலருக்கு இத்தகைய உதவிகள் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு உதவிகள் கிடைக் காதவர்களுக்கும் உதவிகள் கிடைக்க உரியவர்கள் பாரபட்சமற்ற வகையில் செயற்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment