‘வரலாற்றின் ஆரம்ப காலம்தொட்டு இந்நாட்டின் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் பங்களித்துள்ளனர்’ என்கிறார் பிரதமர்
மிகப் பழங்காலம் தொட்டு இலங்கையின் அரச பாதுகாப்பிற்காக முஸ்லிம்கள் பங்களித்துள்ளார்கள் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன குறிப்பிட்டார். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ‘பறங்கி கோட்டைக்கு சென்ற’ என்ற பழமொழியுடனும் முஸ்லிம்களுக்குத் தொடர்பிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
குறுக்குப் பாதை இருக்கும் போது நீண்ட பாதையால் போர்த்துக்கீசியரை அரச மாளிகைக்கு அழைத்துச் சென்று அரசாங்கத்திற்கு உதவியதுதான் அதற்குக் காரணம் என, ஸவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கிற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக நேற்று அவர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சென்றபோதே இக்கருத்தைக் குறிப்பிட்டார்.
அத்திணைக்களத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடப் பணிகள் பற்றியும் அவர் ஆராய்ந்தார்.
(கலைமகன் பைரூஸ்)
2 comments :
It is true Srilankan muslims are very friendly and kind people.They do respect the other communities.They have the courtesy of giving due respect to others and hospitality minded too.
They are not funadamentalists or deeper conservatives,an advanced society in our country.
Post a Comment