மாங்குளத்தில் கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் உத்தரவு.
திங்கட்கிழமை உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 30.12.2012 ம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலையின் இரத்தவங்கியில் கடமையாற்றிய டாக்டர் சிவசங்கர் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். உண்மையான அடையாளங்களை மறைத்து மாறுவேடத்தில் படைமுகாம் ஒன்றினுள் நுழைந்து படை அதிகாரிகளின் கடைமைக்கு குந்தகம் விளைவித்தார் என்ற பிரதான குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட இவர் 14 நாட்கள் விளக்க மறியல் உத்தரவின் பிரகாரம் அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 10ம் திகதி வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
டாக்டர் எதிர்வரும் திங்கட் கிழமை 7ம் திகதி வவுனியா வைத்தியசாலையில் மனோவியல் நிபுணர் ஒருவரின் வைத்திய அறிக்கைக்காக சோதனைக்குட்படுத்தப்படவுள்ளார். யாழ் வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பிலுள்ள தமது தாய் சங்கத்திடம் இவரது விடுதலைக்கு ஆவன செய்யுமாறு உத்தியோகபூர்வமாகவும் இரகசியமாகவும் (Official and confidential ) விடுத்துள்ள வேண்டுதலை அடுத்து மேற்படி சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அவர்கள் விடுத்துள்ள இரகசிய வேண்டுதலில் டாக்டர் சிவசங்கர் மனநோய்க்கு உள்ளாகியிருந்தார் எனவும், அவரது மனநிலையை கருத்திலெடுத்து விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலைக்கு ஆவன செய்யுமாறு வேண்டுப்பட்டுள்ளதாம். இவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு டாக்டர் சிவசங்கர் சுமார் ஒருவருடங்களுக்கு முன்னர் கொழும்பில் மனோவியல் வைத்தியரிடம் வைத்தியம் பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
யாழ் வைத்திய அதிகாரிகள் சங்கம் இவரது விடுதலைக்காக டாக்டர் உளவியல் ரீதியாக பாதிப்படைந்துள்ளார் என்ற விடயத்தை தவறாக பயன்படுத்தும் என நம்ப முடியாது. ஆனால் வைத்தியரை இராணுவத்தினர் மனநோயாளி என குற்றஞ்சுமத்தி சிறையில் அடைக்கப்போகின்றார்கள் என சித்தரித்த றேடியோவுக்கு குருவானவரின் மனநிலை இங்கு விவாதத்துக்கும் விமர்சனத்திற்கும் உரியது.
குருபரன் தனது மண்டையில் கட்டி ஒன்று உருவாகி அது வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெட்டியபோது பரவியிருக்கக்கூடிய கிருமிகளை அழிப்பதற்காக அன்ரிபாயோற்றிக் எடுத்துக்கொண்டிருப்பதாகவேறு கதை சொல்லியிருக்கின்றார். இந்நிலையில் வன்மையான விமர்சனங்கள் அவரது மனநிலையை பாதிக்க கூடாது என்ற விருப்பில் விமர்சனத்தை மென்மையாக கையாள விரும்புகின்றேன்.
இன்று இலங்கையிலே நிகழ்வுகள் இடம்பெறுகின்றபோது அரசியல்வாதிகள் ஒரு எடுபிடியுடன் சென்று முன்வரிசையில் நின்று படங்களை எடுத்துக்கொண்டு 'ஐயா நூல்வெட்டி பிரமாண்டாக திறந்து வைத்தார்' என ஊடகங்களுக்கு தாமே செய்திகளை அனுப்புவதுபோல், சிவசங்கரின் கைதுடன் சிவசங்கர் கைதாகிபோனார் மேலும் ஒருவரும் இல்லை நான் ஒருவன்தான் இருக்கின்றறேன் அரசியலுக்கு வரப்போகின்றேன் என்ற விருப்பத்தை குருபரன் சூசகமாக சொல்லியிருப்பதாக நான் உணர்கின்றேன்.
ஊடக விபச்சாரிகளாக இருந்த ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், சிறிரங்கா வரிசையில் தாங்களும் மாறலாம். அது தங்களின் அடிப்படை உரிமை. ஆனால் மக்களை மந்தைகளாக்கித்தான் அரசியலுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்பு தவறானது. ஊடகவியலாளர்களை குத்திக்காட்டி நான்தான் நல்லவன் வல்லவன் என்கின்ற தங்களின் 'விராலில்லா குளத்தில் குறட்டை தலைவன்' என்கின்ற கதை தொடர்ச்சியாக அவதானிக்கப்படுகின்றது.
ஆடுநனைகின்றது என ஓநாய் அழுத கதையாக தாங்கள் சிவசங்கர் சார்பாக எழுதியுள்ள கட்டுரையில் 'சிவசங்கர் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான அத்தாட்சிக் கடிதத்தை வடக்கில மனநலத்துறையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆக, இராணுவத்தனருடன் தர்க்கம் செய்தவர் மனநலம் பாதிக்கப்ட்டவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் அரச ஆதரவாளர்கள் இலங்கையில் நல்லிணக்கமும் சமாதானமும் மலர்கிறது தமிழ்த் தேசியவாதிகளும் புலி ஆதரவாளர்களும், புலம்பெயர்ந்தவர்களும், புலம்பெயர் இணையங்களும்தான் இலங்கையின் வடகிழக்கில் ஓடும் தேனைம் பாலையும் விசமாகக் காட்டுகிறார்கள் எனச் சொல்ல மனச்சாட்சி எப்படி இடம் கொடுக்கிறதுஎப்படி என்று தான் புரியவில்லை.'
மனநோயினால் டாக்டர் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு நடந்துகொண்டார் என யாழ் வைத்தியர்கள் சங்கம் விடுதலையை விரைவுபடுத்தக் கோருகின்ற நிலையில், வைத்தியரை தர்க்கம் செய்தமைக்காக மனநோயாளியாக்க முற்பட்டார்கள் என்று கதைபுனைய உங்கள் மனச்சாட்சி எவ்வாறு இடம்கொடுத்ததோ தெரியவில்லை என்றுதான் கேட்க முடிகின்றது.
மேலும் இலங்கையில் தேனும் பாலும் ஓடுவதாக யார் கூறினார்கள்? அவ்வாறு எவராவது கூறியிருந்தால் அவர்கள் இருளில் இருக்கின்றார்கள் என்பதே அர்த்தம். இலங்கை 30 வருடங்கள் பயங்கரவாதத்தினால் பீடிக்கப்பட்டிருந்ததோர் நாடு. இலங்கையின் பொருளாதாரம் தொப்பென வீழ்ந்திருந்த நிலையில் அதன் முழுப்பலத்தையும் பிரயோகித்து நாட்டின் பொருளாதாரத்திற்கும் , குடிமக்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாகவிருந்த பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தாங்கள் எதிர்பார்க்கும் தேனும் பாலும் இந்நாட்டில் ஓடவேண்டும் என்பதுதான் நாட்டை நேசிக்கின்றவர்கள் யாவரதும் எதிர்பார்ப்பும். ஆனால் அதற்கு சிலவேளை தசாப்தங்கள் எடுக்கலாம். காரணம் இன்றும் இலங்கைக்கு எதிரான சதிவலைகள் மிகவும் கபடத்தனமாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஆபிரிக்க நாடுகளைப்போல் இலங்கையில் பட்டினியால் கொத்துக்கொத்தாக செத்து மடியாமல் மக்கள் அன்றாட வாழ்க்கைதனை சாதாரணமாக கொண்டு செல்கின்றார்கள் என்றால் அது பெரும்வரம்.
மேலும் ' 30 வருட மக்களுடனான வாழ்வில் 8 வருடங்கள் போராட்ட வாழ்வாகவும் 22 வருடங்கள் ஊடக வாழ்வாகவும் கழிந்தது. ஆக 5 வருட ஐரோப்பிய வாழ்வைக் கழித்து 25 வருட வாழ்வு எம்மக்களின் இன்பதுன்பங்களைச் சிறிய அளவிலேனும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பிருந்தது. அந்த மன நிறைவும் இன்று அற்றுப்போய் நாளாந்தம் வரும் செய்திகள் பிரசுரிக்க முடியாத தகவல்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி துயருறும் வாழ்வு தொடர்கிறது.'
குருபரனுக்கு அரசியலினுள் நுழையும் ஆசையும் வந்துவிட்டதுபோல் என்ற சந்தேகம் மேலுள்ள பந்தியில்தான் தோன்றியது. 25 வருடகாலம் மக்களுடனான வாழ்வு பற்றியும் 8 வருட போராட்ட வாழ்வு பற்றியும் 22 வருட ஊடக வாழ்வு பற்றியும் கூறப்பட்டுள்ளது. இராணுத்தில் இணைந்து கொண்டுள்ள பெண்கள் தமது சுயவிருப்பின் பேரில் இணைந்துள்ளார்கள், அவர்கள் எவ்வித பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை என்ற உண்மையை உணர்த்த முயன்ற டாக்டர் ஒருவரிடம் கேள்விகள் பல தொடுத்த தங்களிடம் சில கேள்விகளை நானும் முன்வைக்க விரும்புகின்றேன்..
8 வருட போராட்ட வாழ்வு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது?
அப்போராட்டம் தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் தொடர்ந்ததா? தேசத்துரோகிகள் என தங்களால் வர்ணிக்கப்படுகின்றவர்களின் தலைமையின் கீழ் தொடர்ந்ததா?
22 வருட ஊடக வாழ்வா? 1999 களில்தான் சூரியனில் இணைந்தாக ஞாபகம் உள்ளது. எப்படி 22 வருடங்கள் ஆனது? அதற்கு முன்னர் மாணிக்கதாசன் நாநிலம் பத்திரிகையை வடிவமைத்து சிலோன் இன்ஸ் ஹோட்டலுக்கு கொண்டுவந்து தந்தால் அதை அச்சு செய்து கொடுத்தது மாத்திரம்தானே. தில் இருந்திருந்தால் இப்போது றேடியோவிற்கு குருவானதுபோல் அன்று பத்திரிகை குருவாகியிருக்கலாமே? நாநிலம் பத்திரிகையில் நடராசா குரபரன் எனும் பெயரில் மக்களுக்காக குரல் கொடுத்திருக்கலாமே?
தாங்கள் கடத்தப்பட்டது, விடுதலைக்காக அன்றிருந்த இந்திய பிரதி தூதுவர் மகாலிங்கம் பிளே பண்ணின றோல் , இந்தியாவுடன் அப்படி என்னவொரு நெருக்கம் அதற்கும் அப்பால் யார் யார் என்ன என்ன றோல் பிளே பண்ணினார்கள் அதற்கான காரண கர்த்தாக்கள் என்ன, இலங்கை அரசிற்கு சேறுபூசுகின்ற இணையங்கள் யாவும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் தங்கள் இணையம் எவ்வாறு தங்கு தடையின்றி இயங்குகின்றது என்கின்ற விடயங்களை எல்லாம் தோண்டி எடுக்கிறத நிறுத்திக்கொண்டு மக்களை தொடர்ந்து மந்தைகளாக்கும் வியாபாரத்தை நிறுத்துவது சிறந்தது என கருதுகின்றேன்.
தாங்கள் நல்லவர் வல்லவர் நேர்மையானவர் என வர்ணித்திருந்த வைத்தியர் பற்றி சிலவற்றையும் இங்கு பதிய விரும்புகின்றேன்.
விளக்கமறியல் கைதியாகவுள்ள டாக்டர் சிவசங்கர் தனது கடமை மற்றும் அந்தஸ்த்துக்கு அப்பால் சென்று தான் ஓர் அரச அதிகாரி என்பதையும், அரச அதிகாரியாக அரசிற்கு எந்த அளவிற்கு கட்டுப்பட்டவன் என்கின்ற வரையறைகளையும் ஊதாசீனம் செய்து, அண்மையில் வன்னி பிரதேசத்திலிருந்து பெண்கள் இராணுவத்தில் இணைந்து கொண்டமைக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்ததுடன் யுவதிகள் இவ்வாறு இணைந்து கொள்ளக்கூடாது என ஊடகங்களுடாகவும் குறித்த யுவதிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பாதுகாவலர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டுவந்துள்ளார். மேலும் இவர் தமிழ் தேசியம் எனக்கூறப்படுகின்ற வடிகட்டிய இனவாதத்தை உதயன் பத்திரிகையில் கட்டுரைகளாக கக்கி வந்துள்ளார்.
இன்று யுவதிகள் தொழிலுக்காக இராணுவத்தில் இணைகின்றபோது எதிர்க்கின்ற டாக்டர் வன்னியில் சிறுவர்கள் புலிப்படையில் வலக்கட்டாயமாக இணைத்துக்கொள்ளப்பட்டபோது எங்கிருந்தார். வலுக்கட்டாய ஆட்சேர்ப்புக்காகவும் புலிகளின் மக்கள் மீது மேற்கொண்ட வன்முறைகளுக்கு எதிராகவும் இவரால் குரல் கொடுக்கமுடியாது போனது ஏன்?
அத்துடன் டாக்டர் சிவசங்கர் இனவாதத்தை மாத்திரமல்ல மதவாதத்தையும் கக்கிவந்துள்ளார். யாழ் இந்து மகா சபையின் தலைவரான இவர் இந்துக்கள் கிறஸ்தவ மதத்தில் இணைவது தொடர்பான தனது வெறுப்பினை அருவருக்க தக்கவகையில் முன்வைத்திருக்கின்றார். மத நம்பிக்கையும் மதம் ஒன்றினை பின்பற்றுவதும் ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமை. இவ்விடயத்தில் ஒருவன் தலையிட முனைவது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
கைது செய்யப்பட்ட டாக்டர் சிவசங்கரிடமிருந்து மீட்கப்பட்ட ஐபேட் இல் இரு பதிவுகள் சேமிக்கப்பட்டுள்ளது. அவை வன்னி பிரதேசத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு இணைந்து கொண்டுள்ள இரு பெண்களை பேட்டி கண்டதான பதிவுகள். இப்பேட்டிகள் உதயன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்டவை என நம்பப்படுகின்றது. அவற்றில் அப்பெண்கள் மதம்மாறியது தவறு என்ற வகையில் சித்தரிக்க முற்பட்டமை புலனாகியுள்ளது. அரச தைத்தியரான இவர் மக்களின் மனங்களை உணர முடியாமல் மதவெறி பிடித்து அலைந்துள்ளதை நியாயப்படுத்த முனைபவர்களின் மனநிலையை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
வைத்தியன் எனப்பட்டவன் இன, மதபேதங்களுக்கு அப்பால் மனிதனாக செயல்பட கடமைப்பட்டவன்..
As a docotor he would have spent his time within the limit of his profession.Dealing out side in political and other vital matters are completely unnecessary for a doctor,because he has enough to do to the sickly patients.Atleast an invention of a new medicine would have given him fame for his profession.May be he has been mesmorized by some group for Sth.Sorry ,this conclusion beyond to our thinking power
ReplyDelete