அமெரிக்க தூதுவராலய பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த நம்ம டாக்டருக்கு எதிராக வழக்கு தாக்கல்.
அமெரிக்க தூதுவராலய பெண் அதிகாரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குறிப்பிடப்படும் வைத்தியருக்கு எதிராக கொள்ளுப்பிட்டிய பொலிசார் கோட்டை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
நுகேகொட, கங்கொடவிலையை வசிப்பிடமாகக் கொண்ட டார்டன் வைத்தியசாலை வைத்தியர் மகேந்திர அபேசிங்க விஜயவர்த்தன என்பவருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி சிலநாட்களுக்கு முன்னர் கையில் ஏற்பட்டுள்ள சிறிய காயமொன்றுக்கு சிகிச்சை பெறச் சென்றிருக்கிறார். அங்கு சந்தேக நபரான வைத்தியர் அந்தப் பெண் அதிகாரிக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்த வேளை, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருப்பதாக கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment