யாழ்.பல்கலைக்கழக செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்?
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.
இதில் யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பல்கலைக்கழகத்தில் நாளை 8ஆம் திகதி முதல் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக நான்கு மாணவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என நாம் எதிர்பார்கின்றோம் என்றார்.
இதேவேளை பல்கலைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிக்காவிடின் பல்கலைக்கழகத்தை மூடிவிடப் போவதாக உயர்கல்வி அமைச்சர் எச்சரித்திருந்தார்.
1 comments :
Look before you leap.Politicians should not make students as tools for their shortcut politics.
Post a Comment