Thursday, January 10, 2013

புலிகளுக்கு தகவல் வழங்கிய இராணுவ சிப்பாய்க்கு எதிராக வழக்கு தாக்கல்.

இலங்கை இராணுவத்தினை சேர்ந்த சிப்பாய் ஒருவர் புலிகளுக்கு தகவல் வழங்கினார் என்ற குற்றச்சாட்டினை எதிர் கொள்கின்றார். புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையே யுத்தம் நடைபெற்ற 2007ம் ஆண்டு காலப்பகுதியில் பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ.எம்.சமன் சுஜீவ என்ற இராணுவச் சிப்பாயே மேற்படி குற்றச்சாட்டினை எதிர் கொள்கின்றார்.

புலிகளின் பணத்திற்காக இராணுவத்தின் பல்வேறு தகவல்களையும் இலங்கையின் கேந்திரங்கள் தொடர்பான தகவல்களையும் இவர் புலிகளுக்கு வழங்கியமை புலன்விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரயில் ஒன்றிலிருந்து வீழ்ந்து நிரந்தர அங்கவீனனாக உள்ள இவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்கின்றனர். குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com