வாய்மூடியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் - முஜிபுர் ரஹ்மான்
அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்ககப்படும் கலவரங்களை வாய்மூடி மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நோலிமிட் நிறுவனத்தை மூடுமாறும் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாம், கடைகள், வீடுகளை வழங்க வேண்டாம் எனவும் சிங்கள மக்களுக்கு தெரிவித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மகரகமவிலுள்ள நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்துக்கு முன்பாக பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய என்ற அமைப்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்மையில் தெஹிவளை மற்றும் களுத்துறை வடக்கிலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்களை மூடுமாறு பிக்குமார் வந்து அறிவித்துள்ளனர்.
இது போன்று நாடு முழுவதும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் மேலோங்கியுள்ளது. 1815ஆம் ஆண்டைப்போன்று கலவரத்தைத் தூண்டிவிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment