Thursday, January 24, 2013

அல்கொய்தாவின் முக்கிய தலைவர் கொல்லப் பட்டார்!!

Saeed al-Shahri என அறியப்படும் Abu Sufyan al-Azdi எனும் அல்கொய்தாவின் பிரதித் தலைவர் யேமனில் கொல்லப் பட்டிருப்பதாகசெவ்வாய்க்கிழமை ஜிஹாடிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த அப்துல்லா பின் முஹம்மட் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் இந்த டுவீட் குறித்து பூகோள தீவிரவாதத்தைக் கண்காணிக்கும் அமைப்பான SITE புலனாய்வுக் குழு இணையத்தில் அறிமுகம் செய்திருந்தது.அல் ஷாஹ்ரி சவுதி அரேபிய நாடால் தேடப்பட்டு வந்த மிக முக்கியமான குற்றவாளியாக அடையாளம் காணப் பட்டிருந்தார்.

எனினும் யேமனைச் சேர்ந்த மூன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் இவரின் மரணம் குறித்துத் தம்மால் உறுதிப் படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இவரின் மரணம் குறித்து SITE அமைப்பு தகவல் அளிக்கையில் டிசம்பரில் இடம்பெற்ற ஆளில்லா விமான (Drone) தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் சமீபத்தில் மரணித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரேபிய செய்தி வலையமைப்பின் அல்-அரேபிய அல்-ஷாஹ்ரியின் மரணத்தை அவரின் உறவினர்களின் கூற்றை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் யேமனின் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி டிசம்பர் தொடக்கத்தில் விமானத் தாக்குதலில் மொத்தம் 80 சந்தேகத்துக்குரிய அல் கொய்தா போராளிகள் கொல்லப் பட்டதாகவும் ஆனால் இதில் அல்-ஷாஹ்ரி அடங்க மாட்டார் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அல்-ஷாஹ்ரி ஏற்கனவே அமெரிக்காவின் இராணுவ சிறைச்சாலையான குவாந்தனாமோ பே இல் 6 வருடங்களுக்கு அடைக்கப்பட்டு 2007 இல் விடுவிக்கப் பட்டார் என்பதும் சவுதி குடிமகனான இந்நபர் 2008 இல் அங்கிருந்து யேமெனுக்கு தப்பிச் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com