இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரும் நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. -கனடா
இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர்; அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இலங்கையில். மனித உரிமை மீறல்களும் மீறப்படுகின்றன. யுத்தத்தின் போது இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தீவிரமாக ஆராய வேண்டும் என இலங்கையில் தங்கியிருக்கும் கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனீ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் நான் சந்தித்த அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தினேன். இது தொடர்பில் கனடா கரிசனையினை காட்டி வருகின்றது
அரசியல் நல்லிணக்க செயற்பாடுகளில் உறுதியான முன்னேற்றங்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நியதிகளுக்கு இணங்கி ஒழுக வேண்டும் என கனடிய அரசாங்கம் வலியுறுத்துகின்றது.
பொதுநலவாய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எமது அரசாங்கம் தொடர்ந்த குரல்கொடுக்கும்' என்றார்.
1 comments :
Some well to do counmtries are trying take an overall in charge of countries like Srilanka.Each country
is a soveriegn state.We are pretty sure that Srilanka is not interfering in other countries matters.
Post a Comment