தமிழீழ விடுதலைப்புலிகள் மறைந்து வைத்திருந்த ஆயுதங்கள் தொப்பிக்கல காட்டிலிருந்து மீட்பு
விடுதலைப்புலிகளின் காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்கள் மட்டக்களப்பு, தொப்பிகல காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வாழைச் சேனைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ் ஆயுதங்கள் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்னவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்கா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இவற்றை மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரம் வருமாறு
ஆர்.பி.ஜி சாஜர் 20,
60 ரக மோட்டார் குண்டு 4,
ஆர்.பி.ஜி குண்டு 4,
60 ரக மோட்டார் குண்டு சாஜர் 6
இவற்றை உறப்பையில் கட்டி நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment