பாதாள உலக கோஷ்டி ஒன்றை கூண்டோடு மடக்கி பிடித்தது பொலிஸ் விசேட பிரிவு.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாதள உலக தலைவரான வெலே சுதாவின் நெருங்கிய பாதாள உலக கோஷ்டி ஒன்றை கொஹூவல பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஸ்.யு.கே. லியனஆராய்ச்சி வீடே பொலிஸ் குழு மடக்கி பிடித்துள்ளது.
கொஹூவல, மிரிஹான, ராஜகிரிய ஆகிய பிரதேசங்களில் மக்களை அச்சுறுத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ள இவர்கள் போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களிடமிருந்து 2 முச்சக்கர வண்டிகள், போதை பொருட்;கள், தங்க ஆபரணங்கள் உட்பட மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கல்கிசை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்டவின் பணிப்புரைக்கமைய கொஹூவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றார்.
0 comments :
Post a Comment