பட்டதாரிகளை பொருளாதார அமைச்சினுள் உள்வாங்க கப்பம். ஐயோ இல்லை என்கிறார் அமைச்சர் முரளிதரன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடுபூராகவும் பட்டதாரி பயிலுனர்கள் என நியமனங்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக 10000 ரூபா வழங்கப்படுகின்றது. இவர்கள் தற்போது பல்வேறு திணைக்களங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது நியமனம் நிரந்தரமாகும்போது எந்த திணைக்களம் என்பதே அது.
இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றுத்தருவதாக கப்பம் பெறப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சர் முரளிதரனின் இணைப்பாளர் ஒருவரால் இவ்வாறு பலரிடம் கப்பம் பெறப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. அமைச்சர் முரளிதரனுக்கான போரதீவு பிரதேச இணைப்பாளராக உள்ளவர் சித்திரவேல். இவர் பலரிடமும் மேற்படி விடயத்திற்காக கப்பம் பெற்றுள்ளதாக இலங்கைநெற் க்கு தகவல் வந்தடைந்ததை அடுத்து நாம் முரளிதரனை தொடர்பு கொண்டு கேட்டபோது குற்றச்சாட்டினை முற்றாக நிராரித்த அவர் 'பட்டதாரிகள் என்ன முட்டாள்களா? பணம் கொடுப்பதற்கு' என்ற கேள்விiயும் கேட்டார்.
அவர் இது தொடர்பில் கூறுகையில், மேற்படி நியமனங்கள் வழங்கப்படுவதற்கு முன்பிருந்து நான் வேலையற்றிருந்த பட்டதாரிகளை பல்வேறு சந்தர்பங்களில் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் தமது வேலையில்லா பிரச்சினை தொடர்பில் பேசுகின்றபோது, விரைவில் தீர்வு ஒன்று காத்திருக்கின்றது, பொறுமையாக இருங்கள் என்று கேட்டிருக்கின்றேன். அத்துடன் அவர்களிடம் மிகவும் நான் எச்சரிக்கையுடன் கூறியவிடயம் உரியநாள் வருவதற்குள் எவரிடமும் வேலைக்காக பணம்கொடுத்து ஏமாறவேண்டாம் என்பதாகும். இந்நிலையில் பணம்கொடுத்திருந்தால் அது அவர்களது முழத்தவறு என்றார்.
0 comments :
Post a Comment