Friday, January 11, 2013

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் தமிழர்கள்


செம்மொழியாம் நம் தாய் மொழியான தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்தது என்பதை நாம் நன்றாக அறிவோம். 65இற்கும் மேற்பட்ட நாடுகளில் பேசப்படும் மொழியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் இதன் மகிமையை அறியாதவர்களாய் நாம் இருக்கின்றோம் என்று நினைக்கும் போது தான் சற்று கவலையாக உள்ளது.


மொழி என்பது ஒரு தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்துக்கோ மிக முக்கியமான ஒரு விடயமாகும். அது அவனையோ அல்லது அந்த சமுதாயத்தையோ அடையாளப்படுத்தக் கூடிய ஒரு விடயம் என்றும் குறிப்பிடலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பல்லின மக்கள் வாழும் பல மொழி கலாசாரங்களைப் பின்பற்றுகிறவர்களே காணப்படுகின்றனர். இருந்தும் சிங்கள மொழியே ஆக்கிரமிப்பு மொழியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. சனத்தொகை அமைப்பில் பார்க்கும் போது இது நியாயமான ஒரு விடயமாக இருந்தாலும் பொதுவாகப் பார்க்கும் போது அது இனவாதத்தின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது.

சிங்களம் மட்டுமல்ல தமிழும் அரச கருமஃநிர்வாக மொழியாகத்தான் இருக்கிறது. இருந்தும் அதை நாம் சரிவரப் பயன்படுத்தாமல் இருக்கின்றோம் என்று தான் சொல்ல வேண்டும். இது அறியாமையா அல்லது அடங்கிப் போதலா என்று தெரியவில்லை. இருப்பினும் தமிழும் நிர்வாக மொழி என்பதை மறந்து விடக்கூடாது. இதற்கான சுற்றுநிருபம் சகல நிறுனங்களுக்கும் அனுப்பட்டுள்ளது என்பதை அண்மையில் ஒரு தேசிய பத்திரிகையில் வாசித்தேன்.

இவ்விடயம் செயற்பாட்டு ரீதியில் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நினைக்கும் போது சற்று கவலையாகத்தான் உள்ளது. இதற்கான காரணம் யாது? தமிழ் பேசும் மக்களாகிய நாமே தான் இதற்கு காரணம்.தமிழ் மொழியைப் பயண்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை நாமே புறக்கணிக்கின்றோம். நமது உரிமைகளை நாமே செயலிழக்கச் செய்கின்றோம். அதாவது நமது அன்றாட நடவடிக்கைகளான வங்கிஇ வைத்தியசாலைஇ பிரதேச செயலகம்இ கிராம உத்தியோகஸ்தர் போன்றவர்களிடம் நமது அலுவல்களுக்காக போகும் பட்சத்தில் நாம் அங்கு நமது உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு சிங்களத்திலேயே நமது காரியத்தை சாதித்துவிட்டு திரும்புகிறோம். நம்மில் அனேகர் நமக்கென்ன என்று ஒதுங்கிப் போவதாலேயே நாம் இன்னும் அதே நிலையில் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் இது தொடர்பாக பேசாது வாய்மூடி மௌனமாக இருக்கும் வரைக்கும் நமது எதிர்கால சந்ததிக்காவது இந்த உரிமையை பெற்றுக் கொடுக்க இன்னும் நாம் முன்வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக வங்கிகளில் உள்ள பற்றுச் சீட்டுக்கள்இ விண்ணப்பபடிவங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் தமிழ் சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் விபரம் நிச்சயம் இருக்கும். ஆனாலும் இந்த இடத்தில் நாம் நமது தன்மானத்தை விட கௌரவத்தையே பெரிதாகப் பார்க்கின்றோம். ஆங்கிலத்தில் பூர்த்திசெய்தால் தான் கௌரவம்இ ஏனையவர்கள் மதிப்பார்கள் என்று ஆங்கிலத்திலேயே அந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வோம். அது அவ்வாறிருக்க ஆங்கிலம்இசிங்களம் தெரியாத ஒருவர் வங்கிக்குச் சென்றாலும் கூட அவருக்கு தமிழ் எழுதத் தெரிந்திருந்தாலும் தனது பற்றுச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து ஆங்கிலத்தில் பூர்த்தி செய்வதை அவதானித்திருப்போம். ஏன் நமக்கும் அவ்வாறான அனுபவங்கள் இருக்கக்கூடும். ஏன் அந்த இடத்தில் பற்றுச் சீட்டையோ அல்லது விண்ணப்பப்படிவத்தையோ நாம் தமிழில் பூர்த்தி செய்து கொடுக்கக் கூடாது. அவ்வாறு தமிழில் பூர்த்தி செய்து கொடுப்பதை வங்கி நிர்வாகம் ஏற்பதில் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாது.

வங்கியில் மாத்திரமல்ல இன்று வைத்தியசாலைகளை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். மறுபக்கம் பிரதேச செயலகங்களை எடுத்துக் கொண்டாலும் அதோ கதிதான். ஏன் நமது கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொண்டாலும் அதிலும் மூன்று மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை முகவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இருந்தும் இன்று நம்மில் அனேகமானவர்கள் கௌரவத்துக்காக ஆங்கில மொழியையே தெரிவு செய்கிறார்கள்.

நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்படாத வரைக்கும் இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். செம்மொழி என்றும் பழமையான மொழி என்றும் இலக்கிய விழாக்களில் மார் தட்டுவதில் எந்தப் பெருமையும் இல்லை. பேசுவது என்னமோ பேசுபவருக்கு பெருமையாக இருக்கலாம். அதாவது தான் ஒரு சிறந்த பேச்சாளன் என்ற பெருமைக்காக பேசலாம். ஆனால் நாம் நமது அன்றட நடடிக்கைகளின் போது தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும் போது கட்டாயமாக நாம் அதனைப் பயன்படுத்த வேண்டும். அந்த உரிமையை விட்டுக் கொடுப்பதில் இருந்து நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com