திடீரென நோய்வாயுற்ற அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மண்டையோட்டுக்கும், மூளைக்கும் இடையில் இரத்தக்கட்டியொன்று அடைப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த இரத்தக்கட்டி கரைவதற்காக மருந்துகள் வழங்கப்பட்டதையடுத்து, அவர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
65 வயதான ஹிலரி கிளிண்டன், எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கு ராஜாங்க செயலாளர் பதவி வகிப்பதற்கு, மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய போது, முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன், அவர்களது புதல்வி செல்சி ஆகியோர், உடன் காணப்பட்டனர்.
No comments:
Post a Comment