Thursday, January 3, 2013

வைத்தியசாலையிருந்து வெளியேறிய கிலாரி ஒபாமாவுக்கு டாட்டா. நான்கு வருடங்கள் ஓய்வாம்.

திடீரென நோய்வாயுற்ற அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மண்டையோட்டுக்கும், மூளைக்கும் இடையில் இரத்தக்கட்டியொன்று அடைப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த இரத்தக்கட்டி கரைவதற்காக மருந்துகள் வழங்கப்பட்டதையடுத்து, அவர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

65 வயதான ஹிலரி கிளிண்டன், எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கு ராஜாங்க செயலாளர் பதவி வகிப்பதற்கு, மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய போது, முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன், அவர்களது புதல்வி செல்சி ஆகியோர், உடன் காணப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com