Saturday, January 12, 2013

ரிசானாவின் கழுத்தை வெட்டி எறித்து இலங்கை முஸ்லிம்கள் எனப்படுவோருக்கு சவுதி அரேபியா சொன்ன செய்தி என்ன?

ரிசானாவின் கழுத்து வெட்டப்பட்ட கொடுரக்காட்சி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க தைரியமற்றவர்கள் தயவு செய்து வீடியோவை கிளிக் செய்யவேண்டாம்.

இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற மூதூர் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரசாங்கம் மரணதண்டனை கொடுத்து இலங்கை வாழ் மக்களுக்கும் உலகத்திற்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. 17 வயது சிறுமி ஒருத்தி செய்ததாக கூறப்படும் குற்றத்திற்காக கழுத்தை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றியதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பொறுப்பு தலைமை அதிகாரி கெத்தரின் ஏஸ்டன் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜப்ஷவும் இக்கொலைக்கு தனது கண்டனத்தையும் வெளியிட்டார். நாடாளுமன்றிலும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ரிசானாவின் கொலைக்கு ஐனாதிபதி மகிந்தவே பொறுப்பு கூற வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனரான பசில் பெர்ணாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பு என்கிற மாபெரும் கொடையை ஒரு ஏழைச் சிறுமிக்கு வழங்கி அதன் மகத்துவத்தை நிரூபிக்க இன்றைய சவூதி அரேபிய அரசாங்கம் மறுதலித்துள்ளதானது இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் என்ற வகையில் எமக்கெல்லாம் கவலையாகவுள்ளது என பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அனுதாப மற்றும் உதவி கோரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இன்று இலங்கை வாழ் மக்களை சோகத்தில் உறையைச் செய்துள்ள இச் செய்தியில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் என்படுகின்ற மக்கள் தொகுதியான உங்களை நாம் இஸ்லாமியர்களாக அங்கீகரிக்கவில்லை என்றும் இலங்கையர்களாக இலங்கைக்கு விசுவாசமாக வாழுங்கள் என்றும் பாக்கிஸ்தான் இலங்கைக்கு கிறிக்கட் ஆடவந்தால் முதலில் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மைதானத்தினுள் நுழையுங்கள் என்றும் சவுதியிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

ரிசானா நபீக் யார்?

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இச்சகோதரி, 1988ம் ஆண்டிலேயே பிறந்திருந்தார். பணிப்பெண்ணாக இவரை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய வெளிநாட்டு வேலை வாயப்பு முகவரான முஸலீம் ஒருவர் தனது ஒரு சில ஆயிரம் ரூபா பண வருவாய்க்காக 1982ல் பிறந்தார் என போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இவருக்குரிய கடவுச் சீட்டைப் பெற்று அனுப்பியிருந்தார். இதற்கு ரிசானாவின் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர். அப்பட்டமாக சொல்வதானால் மார்க்கம் சொல்லுகின்ற 7 பேரைக் கட்டி 70 பிள்ளைகளை பெற்று இனத்தை பெருக்குங்கள் என்ற ஏழுதப்படாத இஸ்லாத்தின் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இன்று அனைவரும் ரிசானாவின் தாய்தந்தையருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இந்த கொலைக்கு வித்திட்டவர்களே பெற்றோர் என்ற உண்மையை எவரும் எடுத்து நோக்கியதாக இல்லை. 17 வயதில் ரிசானாவை சவுதி அரேபியா அனுப்பி விட்டு குச்சை குடிசையிலும் இல்லறம் நாடாத்திக்கொண்டிருந்த சிறுமியின் தந்தையிடம் வறுமையாயின் “ நீ சவுதிக்கு சென்று உன் குழந்தைகளை காப்பாற்றியிருக்காலாம் அல்லவா” என்ற கேள்வி கேட்கப்படவில்லை.

சவூதி அரேபியாவில் இக்குழந்தை பணிபுரிந்த வீட்டில் 4 மாதக் குழந்தையொன்றைக் கொலை செய்ததாக இவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு 2005ம் ஆண்டு சவூதி அரசாங்கத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்றபோது ரிசானா நாபீக்கின் வயது உண்மையில் 17 ஆகும். அதாவது சிறு பெண்ணாகவே (மைனர்) இருந்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் இவர் முற்றாக மறுதலித்து சாட்சிய ரீதியாக தான் இக்கொலையைச் செய்யவில்லை என்றும் வாதாடியிருந்தார்.

எனினும் கடவுச் சீட்டில் காணப்பட்ட போலியான பிறந்த திகதியின் அடிப்படையில் இவருக்கு சவூதி அரசாங்கம் மரண தண்டனையை விதித்திருந்தது.
அதாவது இவரது மரணத்திற்காக வித்தானது தனக்கு கிடைக்கும் ஒரு சில ஆயிரம் ரூபாக்களுக்காக ஒரு போலியான முஸ்லீம் முகவர் ஒருவர் செய்த ஏமாற்று வித்தையினாலேயே உருவானது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக், சவூதி அரேபியாவிலுள்ள தவாத்மி பகுதியில் அமைந்துள்ள சிறையில் இதுவரை காலமும் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிiயில் சவூதி அரசாங்கம் இவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியதோடு இவரது சடலமும் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லீம்களின் கூக்குரலுக்கு இஸ்லாம் பிறந்த பூமியான சவூதியில் எந்தவிதமான பதிலும் இல்லையென்பதும், இலங்கை அரசாங்கத்தையும் சவூதி மன்னர் மதிக்கவில்லையென்றும் ஏற்றுக்கொள்ளவில்;லையென்றும் உண்மை சாற்றுகின்றது.

ஆனால் சிறையிலிருந்து வாடிக்கொண்டிருக்கையில் நான் வாழ ஆசைப்படுகின்றேன் , எனது சொந்த ஊரான மூதூருக்கு போக விரும்புகின்றேன் எனக்கூறிக்கொண்டிருந்த ரிசானா எவ்வாறு கோரத்தனமாக கொல்லப்பட்டாள் என்ற தங்கள் மார்க்கத்தின் வீர தீரச் செயல்களை பகிரங்கமாக தொலைக்காட்சிகளில் போட்டுக்காட்டி அராபியர்களின் கொலைவெறிக்கண்களுக்கு தீனி போட்டுள்ளது.



இதில் வேதனைக்குரிய விடயம் யாதெனில் ரிசானாவை பெற்றடுத்த தாய் கூட அராபியர்களின் இந்த கொடுரக்கொலையை கண்டிக்க திராணியற்றவளாக “அல்லா கொடுத்தாராம், அல்லாவே எடுத்திட்டாரம்” என்று கூறியுள்ளார். பெற்ற குழந்தை இங்கே வீடியோவில் காட்டப்படுகின்றவாறு கட்டி வைத்து வெட்டிக்கொல்லப்பட்டுள்ளபோதும் மதவெறி கண்டிக்க திராணியற்றவர்களாக்கியுள்ளது. அல்லது மதவெறி பிடித்த சாத்தான்கள் இவர்களை சூழ்ந்துள்ளார்கள் எனலாம்.

இலங்கையிலே மதவெறியை ஊட்டுவதற்கு பின்னால் நிற்கின்ற சக்கிகளை இனம்கண்டு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் சவுதி அரேபியாவின் காட்டாட்சி இங்கும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படலாம். அதற்கு ஹிஸ்புல்லா காத்தான்குடியில் நட்டு வைத்திருக்கின்ற ஈச்ச மரங்கள் சான்று பகர்கின்றன. அரபு தேசத்தின் அடையாளங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை கருத்திலெடுக்க வேண்டிய காலம் நெருங்கியுள்ளது.

இலங்கையிலே ஒரு மரணம் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினை அந்த சோகத்திலிருந்த மீளச்செய்வதற்காக அவர்களுக்கு உதவி உபகாரங்கள் செய்வது இலங்கையில் வாழுகின்ற சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் கலாச்சாரமாக உள்ளது. அதை இலங்கை அரசாங்கமும் சட்ட ரீதியாகவும் சம்பிரதாக பூர்வமாகவும் செய்து வருகின்றது. அந்த வகையில் ரிசானாவின் பெற்றோருக்கு வீடு ஒன்றினை கட்டிக்கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம், இராணுவம், பிற அமைப்புக்கள் என்பன முன்வந்ததை உணர்ந்த ஹிஸ்புல்லா சவுதி ஆராபியன் ஒருவனிடம் பிச்சை எடுத்து அந்த உதவியை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த முரண்பாடு சர்வசாதாரணமானதோர் முரண்பாடு அல்ல. இலங்கை அரசாங்கம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் செய்ய முயன்ற உதவியை முடக்கி அராபியனை இங்கு கொண்டுவந்து நுழைப்பதன் ஊடாக மேலும் மக்கள் மத்தியில் மதவெறியை ஹிஸ்புல்லா ஊட்ட முற்படுகின்றார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பணஉதவி பெறுவதும் அதில் பாதியை தங்கள் பைகளில் போட்டுக்கொள்வதும் சாதாரணமாக சகல அரசியல்வாதிகளிடமும் உள்ள பொதுவான குணம். இன்று ரிசானாவின் குடும்பத்திற்காக அராபியனிடம் பணம்பெறச்சென்ற ஹிஸ்புல்லா ரிசானாவை விடுதலை செய்ய என்ன செய்தார். ஆம் இவர்கள் பேசினார்களாம், ஆனால் இவர்களை இஸ்லாமிர்களாக சவுதி ஏற்கவில்லையாம் என்ற செய்தியே வருகின்றது.

இந்த ஒரு பதில் வெறிபிடித்த அனைத்து முஸ்லீம்களுக்கும் இரண்டு கன்னதில் செருப்பால் அடிப்பது போல் இருக்கும் என்று எனக்கு புரிகின்றது. ஆனால் இது இலங்கைவாழ் நல்மனம் கொண்ட எந்த இஸ்லாமிய சகோதரர்களையும் புண்படுத்துவதற்கான எண்ணம்கொண்ட ஆக்கம் அல்ல. அநியாயம் இடம்பெறும்போது மதம் எனும் பெயரால் மௌனிப்பவர்களையும் , அதற்கும் ஒரு படிமேல்சென்று படுபாதக கொலையை நியாயப்படுத்துவர்களையும் தட்டி எழுப்புவதற்காகவே. நிச்சயமாக தூங்குகின்றவனை எழுப்ப முடியும் தூங்குவபன்போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்பதனையும் யான் அறிவேன்.

இன்று நாட்டில் பல பிரச்சினைகளுக்கும் “நாங்கள் முஸ்லீம்கள் மதத்தினால் மதம் பிடித்து அலையும் அரேபிய ஒட்டகங்களே” பதில் என்னவென்று தெரியாமல் உள்ளதா! பதில் ஒன்று தாம் நாம் அனைவரும் இலங்கையர்களாக மட்டும் ஒற்றுமையாக வாழ்வது தான்.

மதங்கள் இனங்களைக் கடந்து ஐக்கிய இலங்கைக்குள் எமது தாய் மண்ணிற்கு விசுவாசமாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து எமது நாட்டை வளப்படுத்தி உலகில் இலங்கையை தலை நிமிர்த்தச் செய்வதே. இது தான் ரிசானா நபீக்கின் கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் செயற்பாடாகும்.

சாகித்தன்.

7 comments:

  1. உண்மை, நீதி, நியாயத்திற்குக்கு எதிராக உங்களுக்கு,உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படியான நிகழ்வு இழப்பு ஏற்படும் பட்சத்தில் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

    சரியாக சிந்தித்துப்பாருங்கள்.!

    இவ்வுலகில், கற்கால காட்டு மிராண்டி ஷரியா சட்டம் சரியா? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

    சவூதி அராபிய காட்டுவாசி அரசாங்கத்தை, நீதி, நியாமற்ற காட்டுமிராண்டி சட்டங்களை எதிர்த்து பேசுவதற்கு எங்கள் நாட்டில் முஸ்லிம் தலைவர்கள், உலாமாக்கள், மெளலவிகள், அரசியல் வாதிகளில் ஒருவனுக்கு கூட துணிவு இல்லை. எனவே முதுகெலும்பு இல்லாத முஸ்லிம்கள் இந்நாட்டின் பல பாகங்களிலும் பள்ளிவாயல்களில் ஜனாஸா தொழுகை மட்டும் செய்து என்ன பிரயோசனம்?

    சரியாக சிந்தித்துப்பாருங்கள்.!

    ReplyDelete
  2. The video clip of the killing will make every sensitive human being to go mad or psychologically damaged.Blood thirsty monsters might see this again and again.Beasts always always behave like beasts.

    ReplyDelete
  3. இஸ்லாமியர்களின் சட்டங்கள் யாவும் தேராகைப் போன்றவை காரணம் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவன் கொடுத்தது. 10 கட்டளைகளைப் போன்றவை
    வேதாகமத்திலும் இஸ்ரவேலர்களின் தேராகிலும் உள்ளதைப் போன்றே சகல தீர்க்கதரிசிகளும். இறைவாகினர்களும் குர்ஆனிலும் நபிகளாக உள்ளனர். உதாரம் ஈசான் நபி என்று சொல்வது ஆண்டவராகிய இயேசுவையே இவர் வந்து உண்மையான மார்க்கம் எது என்பதைப் போதிப்பார் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை,
    இதைத் தான் கிறிஸ்தவர்கள் இயேசு என்று சொல்லி அவர் இரண்டாம் தரம் வரப் போகின்றார் என்று சொல்கின்றார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு இறைவன் கொடுத்த கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற கட்டளைகளை அவரே மாற்றி அன்பு மன்னிப்பு என்று புதிய ஆரம்பத்தை கொடுத்திருக்கின்றார். இயேசு கிறிஸ்து மூலம். இந்நிலையில் கடவுளே மாற்றிய சட்டங்களை வாக்குதத்தங்களின் ஜனங்களே இல்லாத இஸ்லாமியர்கள் இன்னமும் பின்பற்றுவது கடவுளின் செயல்களை அறிந்து கொள்ளாமையாகும். இவ்வாறான சட்டங்கள் இஸ்ரவேலிலும், இஸ்லாமியர்களிடமும் இருந்து மறைந்து போக வேண்டும்.

    ReplyDelete
  4. இலங்கையில் வாழும் அனைவரும் இலங்கையர்களாக இலங்கைக்கு விசுவாசமாக வாழ வேண்டும் , சிங்கப்பூரில் வாழும் தமிழரை அல்லது மலேசியாவில் வாழும் தமிழரை , எந்த நாட்டவர் என்று கேட்டால் , சிங்கபூரியன் , மலேசியன் என்று தான் பதிலளிப்பார்கள் , அதனால் தான் அவர்களும் அவர் வாழும் நாடுகளும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இலங்கை யாழ்ப்பான தமிழ் பரதேசிகள் தமிழர் என்று சொல்லுவர் , ஆனால் வெள்ளைகாரனுக்கு குண்டடி கோப்பை மலம் கழுவி பிரெஞ்சு , இங்கிலாந்த் , கனடா , சுவிஸ் , ஜெர்மனி பிராயஉரிமை பெற்று , தம்மை அந்நாட்டவர் என்று சொல்லிக் கொண்டு பொழுது போக்குக்கு தமிழ்ஈழம் கேட்பார்.

    "இரட்டை குடியுரிமை வழங்க பட்டால் அது தமில் ஈழம் கிடைத்ததுக்கு சமனாகும். "

    அந்த முட்டாள் தனத்தை இலங்கை அரசு செய்தாலும் செய்யும்.

    தேச பற்றை சிறு வயது முதல் பயிற்றுவிக்க வேண்டும் , இன வாதத்தை சகலரும் தவிர்க்க வேண்டும்.

    இலங்கை , ஒரு சிங்கபூரகவோ , மலேசியா , அல்லது ஹோங்கோங் போல் வருவதை பல நாடுகள் விரும்பவில்லை , முதலில் அமேரிக்கா , குப்பைமேடு இந்தியா.

    சீனாவுடனான இலங்கையின் நட்பு இலங்கையை ஒரு முன்னேற்றகரமான நாடாக உருவாக்கும்.

    ReplyDelete
  5. இந்த செய்தியை பாருங்கோ (http://www.ilankainet.com/2013/01/blog-post_6244.html) அண்மையில் டில்லியில் காமூவர்களால் சூறையாட பட்ட பெண்ணினதும் அச்செய்தியை கேட்டு கருத்து சொன்ன பலபேரும் அக்காமுகர்களை உயிரோடு ஏறிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் .
    அதே போன்றுதான் இஸ்லாமிய சரியா சட்டமும் கூறுகிறது கொலைக்கு கொலைதான் என்று.
    அதில் என்ன தவறு ரிசானாவுக்கு நடந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு பொறுப்பே தவிரே இஸ்லாமிய சரியா சட்டம் கிடையாது. இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும் தவறாக சித்தரிக்க நினைப்பவர்கள் முதலில் இஸ்லாத்தை படித்து விட்டு இஸ்லாத்தை விமர்சிப்பது நல்லது.

    ReplyDelete
  6. இஸ்லாத்தை படிப்பது ரொம்ப இலகு இஸ்ரவேலையும் கிறிஸ்தவத்தையும் நன்கு படித்தால் இஸ்லாம் என்ற ஒன்று எங்கிருந்து வந்ததென்று நன்கு தெரியும். ஆண்டவராகிய பிதா உங்களுக்கு அல்லாவாக தெரிகின்றார். உங்கள் வம்சத்தின் வித்து யார்? தெரியுமா? ஆபிராம் எனப்பட்ட ஆபிரகாம். இஸ்ரவேலுக்கும் இஸ்மவேலுக்கும் தகப்பன். தாய் சாராள் மற்றும் ஆகார்.
    என்ன! நண்பரே உங்கள் சரித்திரம் சரியா?

    இஸ்ரவேலுக்கு 10 கட்டளைகளை மோசே மூலமாக சீனாய் வனாந்தரத்தில் கொடுத்த போது தான் பிதாவானவர் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று எல்லாவற்றையும் பதிலுக்கு பதில் என்று எழுதினார்.

    ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பி புதிய யுகத்தை அவர் ஆரம்பித்து விட்டார் .ஆனால் உங்கள் குர்ஆனில் அதனை மாற்றியெழுத நீங்கள் தான் தயாராக இல்லை.

    ReplyDelete
  7. தலையில் மலம் சுமந்த எழுத்தாளரின் ஆக்கம் மிக தரக் குறைவானது

    ReplyDelete