பெப்ரவரி முதல் மின்தந்தி ரத்து
பெப்ரவரி மாதம் முதல் மின் தந்திச் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. மின் தந்திகளை அனுப்புவதனால் தபால் திணைக்களத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுவதாகவும் தொடர்ந்தும் நட்டத்தில் இவ்வாறன தந்திச் சேவையை வழங்க முடியாது எனவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இச் சேவையை வழங்குவதற்காக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இந்த ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தை தபால் திணைக்களம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment