பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, நேட்டோ ஹெலிகாப்டர் படையினருடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி முக்கிய தலிபான் தளபதி ஒருவரைக் கொன்றிருந்தார்.இதனையடுத்து ஆப்கானின் முன்னால் பிரதமர் மற்றும் Hezb-i-Islami கட்சியின் தலைவர், பிரிட்டன் படைகள் அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் போரிடுவதைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது பிரிட்டன் மக்கள் எதற்காக தமது பிள்ளைகளை அமெரிக்காவுடன் கை கோர்த்து யுத்தக் களத்துக்குப் பலியாவதற்கு அனுப்பி வைக்கின்றனர் எனத் தனக்குப் புரியவில்லை என்று தெரிவித்திருந்தார். இதேவேளை அமெரிக்காவின் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள குல்புதீன் ஹெக்மத்யார் எனும் தலிபான் தளபதி, இளவரசர் ஹரி குடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் அப்பாவி ஆப்கான் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைப் பலி வாங்குகிறார் எனவும் அவருக்கு தலிபான் போராளிகளை வேட்டையாடும் திறமை சிறிதும் இல்லை எனவும் கருத்துரைத்திருந்தார்.
இதற்கு பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு தலிபான் தளபதியின் இக்கூற்றை முற்றிலும் மறுத்துரைத்ததுடன் இளவரசர் குடித்திருந்தார் எனவும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தினார் எனவும் கூறப்படும் கருத்துக்கள் அப்பட்டமான பொய் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து பிரிட்டன் படையின் பேச்சாளர் கூறுகையில் ஆப்கானில் குடி கொண்டிருக்கும் பிரிட்டன் படையினர் அல்ககோல் பாவிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ படையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு, தமது படையில் 30 000 பேரைக் குறைத்திருந்தது. மேலும் 2014 ஆம் ஆண்டு அங்கிருக்கும் நேட்டோ படையினரின் செயற்திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment