முழு நகரையும் கண்காணிக்கும் அமெ. ஆளில்லா உளவு விமானம்
இந்த புதிய விமானம் மூலம் எமது கையடகட்க தொலைபேசியையும் அவதானிக்கலாமாம் அப்ப வாசித்து சிந்தியுங்கள் வேற என்னவெல்லாம் இனி அவதானிக்கப்பட போகுது என்று!
முழு நகரையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கக்கூடிய திறன்கொண்ட ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது.இந்த விமானத்தின் மூலம் 20.000 அடி மேலே இருந்து 30 சதுர மைல் பரப்பளவை தெளிவாகக் கண்காணிக்க முடியும். இந்த உளவு விமான தொழிநுட்பத்திற்கு கிரேக்கத்தின் 100 கண்கொண்ட கடவுளான அர்குயினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு தொழிநுட்ப ஆய்வு மையத்தின் 18.5 மில்லியன் டொலர் திட்டத்தில் அர்குஸ் உளவு விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் ஒரு ஐபோன் கெமராவை விடவும் 225 மடங்கு திறன் கொண்டதாக இருக்கும். இதன்மூலம் இந்த உளவு விமானத்தால் 20,000 அடி உயரத்திலிருந்து 6 அங்குல சிறு பொருளையும் தெளிவாக கண்காணிக்க முடியும்.
அதாவது நாம் கொண்டு செல்லும் கையடக்க தொலைபேசியின் ரகம் குறித்தும் இந்த உளவு விமானத்தால் அவதானிக்க முடியும். இதன்படி முழு யுத்தகளத்திலும் எதிரிப்படைகளின் நகர்வுகளை மட்டுமன்றி அவர்கள் ஏந்திச் செல்லும் பொருட்களையும் தெளிவாக கண்காணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஆளில்லா கண்காணிப்பு உளவு விமானங்களை மேம்படுத்தி வரும் போதும் அதனுடைய யுத்தகள செயற்பாடுகள் குறித்து ரகசியம் பேணப்படுகிறது.
0 comments :
Post a Comment