மனித உரிமை எனும் ஆயுதம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது. ஜிஎல்.
மனித உரிமையினை ஆயுதமாக பயன்படுத்தி, எமது நாட்டுக்கு எதிராக அழுத்தங்களை திணிக்க, சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன. இது தொடர்பில், விளக்கத்துடன் செயற்படுவது, சகலரினதும் பொறுப்பு என, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல, கிரம, தம்மானந்த கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் மேலும் பேசுகையில் அன்று இந்த நாட்டை சீர்குலைப்பதற்காக ஆரம்பித்த சூழ்ச்சிகளை, இதுவரையில் இவர்கள் கைவிடவில்லை. இன்று இவர்களது முறைகள் மாத்திரமே மாற்றம் பெற்றுள்ளன. துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்வதில்லை. இவர்கள், எமக்கு எதிராக, அரசியல் ரீதியான ஆயுதத்தை ஏந்த முயற்சிக்கின்றனர். இந்த அரசியல் ஆயுதத்தை, மனித உரிமைகள் என்ற போர்வையிலேயே, இவர்கள் எமக்கு எதிராக ஏந்தவுள்ளனர்.
இதனை முறியடிக்க, நாம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அரசிற்கு எதிரான சூழ்ச்சிகளை வெற்றிகரமாக தோற்கடிக்க, அனைவரது ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகும் என்றார்.
0 comments :
Post a Comment