மட்டக்களப்பு நகரிலிருந்து வெளியேற்றப்படும் காந்தி சிலை
மட்டக்களப்பு நகரில் நகர அபிவிருத்திக்கு தடையாக காணப்படும் காந்தியின் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.தற்போது மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் தற்போது காந்தி சிலை காணப்படும் பகுதியிலிருந்து காந்தியின் சிலையினை அகற்ற வேண்டியுள்ளதாக மேயர் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி முடிவடைந்ததும் அகற்றப்பட்ட காந்தியின் சிலையினை தற்போது சிலை அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் மீண்டும் நிறுவ தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment