Wednesday, January 16, 2013

இரக்கமற்ற காமுகர்களை உயிரோடு தீயிலிட்டு எரிக்க வேண்டும்

நாங்கள் இருவரும் நடுவீதியில் ஆடைகள் ஏதுமின்று நிர்வாணமாகக் கிடந்தோம். என்னால் அசையக்கூட முடியவில்லை. அவ்வீதியால் வாகனங்களில் சென்றவர்கள் தமது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து எம்மைப் பார்த்துச் சென்றனரே தவிர ஒருவர் கூட எமக்கு உதவ முன்வரவில்லை. ஒருவர் மட்டும் அருகில் வந்து என்ன நடந்தது என்று கேட்டு விட்டுச் சென்றார். அவரும் கூட எமக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.

இவ்வாறு தெரிவித்தவர் வேறு யாருமில்லை. கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லியில் தனது கண்முன்னாலேயே காமுகர் கும்பலால் மிகக் கொடூரமாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, சில வாரங்கள் மரணப்படுக்கையில் கிடந்து உயிர் துறந்த மருத்துவக் கல்லூரி மாணவியான ஜோதி சிங் பாண்டேயை திருமணம் செய்ய எண்ணியிருந்த அவரது காதலனாகும்.
இந்த மாணவிக்கு நடந்த கோரச் சம்பவமும் பின்னர் அவரது மரணமும் இன்னும் பலரது மனங்களில் இருந்து நீங்கவில்லை.

இந்தக் கொடூர சம்பவத்தை நேரில் கண்டு பாதிக்கப்பட்ட ஒரேயொருவர் முதன்; முறையாக இந்திய தொலைக்காட்சி ஒன்றில் சம்பவம் பற்றிய கருத்துக்களை கண்ணீர் மல்க வெளியிட்டார்.
அன்று அந்த சம்பவத்தில் படுமோசமாக தாக்கப்பட்டதால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
அவர் அக்கொடூர சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;
நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவே எண்ணியிருந்தோம். அன்று ஒரு திரைப்படத்துக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் நடந்தது. அந்த பஸ்ஸில் ஏரியபோது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. சற்று நேரத்தில் மேலும் குறைய ஆரம்பித்தது. அப்போது தான் பஸ் திடீரென வேறு திசையில் செல்ல ஆரம்பித்தது. கதவுகள் அடைக்கப்பட்டன. அச்சமடைந்த நான் நடக்கப் போவதை சற்று ஊகித்துக் கொண்டேன். ஒருவன் என்னருகில் வந்து இரும்புக் கம்பி ஒன்றால் பலமாக எனக்கு அடித்தான். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கால்களில் பலமாக அடி விழுந்ததால் என்னால் எழும்ப முடியவில்லை. மயங்கி விழுந்தேன். நினைவு திரும்பிய போது, நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

என் ஜோதியை அந்தக் காமுகர்கள் சீரழித்துக் கொண்டிருந்தார்கள். அவள் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளத் துடித்தாள். அவளை அவர்கள் கொடூரமாகத்தாக்கி சித்திரவதை செய்தார்கள். என் நெஞ்சு பொறுக்கவில்லை. எழுந்து போய் ஜோதியைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை. என் கால்கள் செயலிழந்து போய் இருந்தன. நான் கால்களை இழுத்து கைகளை ஊன்றி ஜோதியைக் காப்பாற்ற முயன்றேன். அப்போது அந்த குழுவில் இருந்த ஒருவன் மீண்டும் ஒரு இரும்புக் கம்பியைக் கொண்டு வந்து என்னை பலமாகத் தாக்கினான். நான் மீண்டும் தரையில் வீழ்ந்தேன்.
அப்போது பஸ்ஸின் கடைசி ஆசனத்தில் வைத்து அந்த 6 பேரும் ஜோதியை மாறி மாறி வல்லுறவுக்குட்படுத்தினார்கள். பிறகு எங்கள் இருவரையும் பஸ்ஸில் இருந்து வெளியே தூக்கிப் போட்டுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
நாங்கள் இருவரும் நடுவீதியில் நிர்வாணமாகவே விழுந்து கிடந்தோம். எல்லோரும் தமது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து எங்களைப் பார்த்து விட்டுச் சென்றார்களே தவிர ஒருவரும் உதவிக்கு வரவில்லை. ஒருவர் மட்டும் என்ன நடந்தது என்று கேட்டார். ஆனால் அவரும் எமக்கு உதவவில்லை.

சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் பொலிஸ் அதிகாரிகள் வந்தார்கள். அவர்களும் வந்தவுடன் எமக்கு ஆடைகளைத் தந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதை விட்டுவிட்டு எம்மிடம் விசாரணை நடத்துவதிலேயே அக்கறை செலுத்தினார்கள். அதன் பிறகு தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அன்று நடந்த சம்பவங்களை ஜோதி பொலிஸாரிடம் கூறியிருந்தாள். இந்த கொடூரத்தைச் செய்தவர்களுக்கு கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே அவளின் ஒரே விருப்பம்.
இது போன்ற இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் அவற்றை வெளிப்படுத்த பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகிறார்கள்.

இத்தகைய ஈவு இரக்கமற்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது. உரியவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை தீயில் உயிரோடு எரிக்க வேண்டும். இதுதான் ஜோதியின் ஆசை என்று தனது உள்ளக் குமுறல்களை சொல்லி முடித்தார். ஜோதியின் காதலன்.
தா.அஸாம்

1 comments :

Anonymous ,  January 16, 2013 at 8:40 PM  

If the Indian government is not going to put an to this kind of barberic criminal activities,there is no point of boasting about themselves.It was really a sorrowful and pathetic story ,we cannot imagine even the psychological and physical pains of both the victims.Specially the dead and gone girl.What a shame to the society and the country.If there is a will there are many ways to wipe out the barberic minded criminals from the society.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com