இத்தாலியிலிருந்து நாட்டினுள் சட்டவிரோமாக கொண்டுவரப்படவிருந்த மோட்டார் சைக்கிள்கள் மாட்டின..
சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட 24 மோட்டார் சைக்கிள்களும் மேலும் ஒரு தொகை பொருட்களும் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டன. இத்தாலியிலிருந்து எடுத்து வரப்பட்ட இந்த 24 மோட்டார் சைக்கிள்கள் இலங்கை சுங்க பிரிவின் விசேட செயலணியினரால் கைப்பற்றப்பட்டன.
2 ஆயிரத்து 500 எஞ்சின் வலு கொண்ட மோட்டார் சைக்கிள்களும், சுமார் 100 இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதில் அடங்கியிருப்பதாகவும் சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர். இந்த மோட்டார் சைக்கிள்கள் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர். 350 எஞ்சின் வலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை மாத்திரமே இலங்கைக்கு எடுத்து வர முடியும்.
இதே நேரம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட 12 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை சிகரட்டுக்களும் ஒரு கோடி ரூபா பெறுமதியான பாதணிகள்;, ஏலம், சீஸ் ஆகியன கைப்பற்றப்பட்டன.
மறுபுறத்தில் மேற்படி பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் இத்தாலியில் உரிய முறையில் கொள்வனவு செய்யப்பட்டதா அன்று களவெடித்து பலபாகங்களாக பிரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதா என்பதை கண்டறிவதற்கு இத்தாலி பொலிஸாரை அதிகாரிகள் தொடர்பு கொள்ளவிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.
0 comments :
Post a Comment