பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இலங்கையின் பிரதான நீதிபதிகளை ஏழு பேரை இடமாற்றம் செய்ய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தீர்மானம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் இவர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்படி, கம்பஹா சிவில்மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சிரோமி பெரேரா, அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதி அநுரகுமார, அநுரதபுரம் சிவில் மேன்முறையீட்டு நீதிபதி நிசங்க பந்துல, அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிபதி சமன் விக்கிரமசூரிய, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க, அவசாவளை சிவில் நீதிமன்ற நீதிபதி இராங்கனி பெரேரா, கல்கிஸ்ஸை சிவில் நீதிமன்ற நீதிபதி எஸ் ரபீக் ஆகியோரே இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment