Tuesday, January 8, 2013

ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி பறிபோகும் அபாயம் -ஐ.தே.க

தெரிவுக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறிச் செயற்பட்டால், அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்த ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என ஐ.தே.க வின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில்.

தெரிவுக்குழு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று அதற்கேற்றவாறு நடவடிக்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது எனக் கூறி அரசியலமைப்பை மீறிச் செயற்படுவதற்கு அரசாங்கத்துக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com