Friday, January 11, 2013

ரிசானாவின் மரணதண்டணை எதிரொலி சவூதி அரேபியா தூதுவரை மீள அழைத்தது இலங்கை!

இலங்கைப் பணிப் பெண் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவுக்கான தூதுவர் அஹமட் ஜவாட்டை மீள அழைத்துள்ளது.

ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, உள்ளிட்ட நாட்டின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரியிருந்தபோதும் இதனை நிராகரித்த சவூதி அரேபிய நீதிமன்றம் ரிசானாவிற்கான மரண தண்டனையை நிறைவேற்றியிருந்தது.

சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவுக்கான தூதுவரை மீள அழைத்துள்ளது.

3 comments :

Anonymous ,  January 11, 2013 at 11:47 AM  

Do not make an eyewash,just terminate all your diplomatic relations with Saudi.Rizana should be repected.Do not sell your images,
respect etc etc for the Sinners money

Tharik Daoud ,  January 11, 2013 at 12:11 PM  

கடந்த 7 வருடங்களாக சகல அமைச்சர்களும் றிசான ரபிக்கின் விடுதலைக்காக என்று (உண்மையாகாவ என்று தெரியவில்லை)போய்வந்தார்கள்.ஆனால் போகும் போது றிசானாவின் தாயைக் கூட்டிக் கொண்டு போய் பாதிக்கப்பட்ட
பெற்றோர் முன் நிறுத்தி நிலைமையை புரிய வைத்திருந்தால் சில வேளைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
இப்போது வீடு கட்டி கொடுப்பதாக( சவுதியன்) கூறியதாக அதாவுல்லா உதார் விடுகிறார்.மானம்கெட்ட அரசியல்
கோமாளிகள்.
அல்லாஹ்வுடைய சட்டத்தில் குறையில்லை.சில வேளைகளில் விசாரித்த நீதிபதிகளில்,சாட்சிகளில்,மரண விசாரனைகளில் தவறு இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் விதியை நம்பும் நாம் இது தான் விதியின் முடிவு
என்று இத்துடன் இதை முடித்திக் கொள்வோம்.

Anonymous ,  January 11, 2013 at 1:00 PM  

It is shame to built a house in Saudi sinner's money.Srilanka's Government should take care about Rizan's parents and sisters,but this concessions or compliments will never be equal to her precious life.Fate cannot be a reason at any cost for the death of Rizana,carelessness and ignorance are the causes for the death of a poor girl.This should not be repeated again.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com