யாழ்.இராணுவத்தின் ஏற்பாட்டில் கரோல் நிகழ்வு
யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை மையத்தினால் யாழ்.ஓ.எல்.ஆர் பேராயலயத்தில் மிகப் பிரமாண்டமான கரோல் நிகழ்வொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கேவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வானது இன்று நடைபெற்றது.
இதில் யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை மற்றும் மத்ததலைவர்கள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது யாழ்ப்பாணத்தின் முதலாவது கத்தோலிக்க சனலான சனல் ஹோலி மேரி என்ற சனலும் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment